புதிது: சிக்கலான பணிகளுக்கு மிக மிக உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எங்களின் முன்னணி மாடலான Gemini 2.0 Pro Experimental மாடலைப் பயன்படுத்திப் பாருங்கள். மேலும் அறிக
Skip to main content
Gemini Advanced

Googleளின் அடுத்த தலைமுறை AIக்கான சிறப்பு பாஸ்

Gemini

Google வழங்கும் உங்களுக்கான தனிப்பட்ட AI அசிஸ்டண்ட். உங்கள் யோசனைகளுக்கு உயிரூட்ட Geminiயுடன் உரையாடுங்கள்.

$0 USD/மாதம்
  • எங்களின் 2.0 Flash, 2.0 Flash Thinking experimental மாடல்களை அணுகுங்கள்

  • எழுதுதல், திட்டமிடல், கற்றல் மற்றும் படங்களை உருவாக்குதில் உதவி பெறுங்கள்

  • பல Google ஆப்ஸுடன் இணைந்திருக்கலாம். உங்கள் உரையாடலில் இருந்தே நேரடியாக Maps, Flights மற்றும் பிற Google ஆப்ஸில் பணிகளைச் செய்து முடிக்கலாம்

  • Gemini Live உடன் இடையூறு இல்லாத குரல் உரையாடல்களை எங்கிருந்தும் மேற்கொள்ளுங்கள்

Gemini Advanced

Googleளின் அடுத்த தலைமுறை AIக்கான சிறப்பு பாஸ். இதில் Geminiயில் உள்ள எல்லா அம்சங்களும் கிடைப்பதுடன் இன்னும் கூடுதல் அம்சங்களும் கிடைக்கும்.

$19.99 USD/மாதம்
முதல் மாதத்திற்கு $0 USD
  • எங்களின் புதிய பரிசோதனை மாடல் 2.0 Pro உட்பட, எங்களின் மிகவும் திறன் வாய்ந்த மாடல்களை அணுகுங்கள்

  • Deep Research மூலம் சில வினாடிகளில் விரிவான அறிக்கைகளைப் பெற்று, நேரத்தைச் சேமியுங்கள்

  • 1,500 பக்கங்கள் வரை பதிவேற்றம் செய்ய முடிவதால், முழுப் புத்தகங்கள், நீண்ட அறிக்கைகள் மற்றும் பலவற்றைப் புரிந்துகொள்ளுங்கள் மற்றும் பகுப்பாய்வு செய்யுங்கள்

  • Create and use custom AI experts for any topic with Gems

  • உங்கள் கோடிங் தரவுச் சேமிப்பகத்தைப் பதிவேற்றுவதற்கான திறனுடன் ஸ்மார்ட்டாகவும் விரைவாகவும் கோடிங் செய்யுங்கள்

  • Google One வழங்கும் 2 TB சேமிப்பகத்துடன் கிடைக்கிறது*

  • Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini அணுகலுடன்* (சில மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது) உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸில் எளிதாக வேலைகளைச் செய்யுங்கள்

*Google One AI Premium திட்டத்திற்கான உங்கள் சந்தாவில் கிடைக்கிறது

Geminiயின் புத்தம் புதிய அம்சங்களுக்கான முன்னுரிமை அணுகலை அன்லாக் செய்திடுங்கள்

Googleளின் சமீபத்திய AI மேம்பாடுகள் பயன்பாட்டிற்கு வரும்போது Gemini Advanced மூலம் அவற்றுக்கான முன்னுரிமை அணுகலைப் பெற்று மிகவும் சிக்கலான திட்டப்பணிகளைக் கையாளலாம்.

எங்களின் திறன்மிக்க பரிசோதனை மாடல்களை அணுகும் முதல் சில நபர்களில் நீங்களும் ஒருவராக மாறுங்கள்

சிக்கலான பணிகளுக்கு மிக மிக உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எங்களின் முன்னணி மாடலான 2.0 Pro மாடலின் பரிசோதனை பதிப்பைப் பயன்படுத்திப் பாருங்கள். மேம்பட்ட கோடிங் சவால்கள் முதல் பள்ளி/தனிப்பட்ட ப்ராஜெக்ட்டிற்கான கணிதச் சிக்கல்களைத் தீர்ப்பது வரை மிகவும் சிக்கலான பணிகளையும் மிக எளிதாகக் கையாளும் வகையில் கோடிங் மற்றும் கணித ப்ராம்ப்ட்களுக்குச் சிறப்பான உண்மைத்தன்மையையும் வலுவான செயல்திறனையும் வழங்குகிறது.1

விரிவான பல-பக்கங்கள் கொண்ட அறிக்கைகளை சில நிமிடங்களில் உருவாக்கலாம்

Deep Research மூலம் எந்தவொரு தலைப்பு குறித்தும் விரைவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இதன் மூலம் சில நிமிடங்களில், உங்கள் ப்ராம்ப்ட்டை ஒரு பல்-முனை ஆராய்ச்சித் திட்டமாக மாற்றவும், சமீபத்திய தகவலுக்காகப் பல நூறு இணையதளங்களைத் தானாகவே பிரவுஸ் செய்யவும், மேம்பட்ட புள்ளிவிவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகளை உருவாக்கவும் முடியும். 2

நீளமான அறிக்கைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் பலவற்றை சில வினாடிகளில் பல பாகங்களாகப் பிரித்திடுங்கள்

Gemini Advanced 10 லட்சம் டோக்கன் சூழல் நினைவுத்திறன் அளவைக் கொண்டுள்ளதால் 1,500 பக்கங்கள் வரை வார்த்தைகள் இருக்கக்கூடிய ஃபைல்களை அல்லது 30,000 வரிகள் வரை கோடிங்குகளை ஒரே நேரத்தில் செயலாக்க முடியும். இதன் மூலம் மிகவும் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்க முன்பைவிட தகவல்களைச் சிறப்பாக ஆராயலாம் மற்றும் பகுப்பாய்வு செய்யலாம்.

உங்கள் கோடிங் பணிமுறைகளை ஒழுங்குபடுத்துங்கள்

உங்கள் கோடிங் பணிமுறைகளை ஒழுங்குபடுத்த உங்கள் சாதனத்தில் இருந்து நேரடியாக குறியீட்டுத் தரவுச் சேமிப்பகத்தைப் பதிவேற்றுங்கள். ஆயிரக்கணக்கான குறியீட்டு வரிகளில் இருந்து உடனடியாக புள்ளிவிவரங்களைப் பெறலாம், அறிவார்ந்த மாற்றங்களைச் செய்யலாம், பிழைகளைத் திருத்தலாம், உச்சகட்ட செயல்திறனுக்குக் குறியீட்டை மேம்படுத்தலாம், எல்லாவற்றையும் பயனருக்கேற்ற இடைமுகத்தில் செய்யலாம்.

மேம்பட்ட பணிகளுக்கேற்ற மேம்பட்ட AI

கல்லூரியில் சேர விண்ணப்பித்தாலோ, வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றாலோ, ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் செய்யத் தொடங்கினாலோ, கூடுதல் வருமானத்திற்கான பணியைத் தொடங்கினாலோ அதற்கான கூடுதல் உதவி தேவைப்படுவதற்கான சமயம் இருக்கும்.

பணியில் முன்னணி வகிக்க, வேகமாகக் கற்றுக்கொள்ளுங்கள், ஆழமாகத் தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் ஸ்மார்ட்டாகத் தயாராகுங்கள்.

சிக்கலான கருத்தாக்கங்களைப் பிரித்தறியலாம், படிப்படியான தீர்வுகளைப் பெறலாம், சிக்கலான தலைப்புகள் மீதான உங்கள் புரிதலை மேம்படுத்த, பிரத்தியேகக் கருத்துகள் மூலம் பயிற்சிக்கான பணிகளை உருவாக்கலாம்.

Deep Research மூலம் சில நிமிடங்களில், உங்களுக்காக விரிவான ஆராய்ச்சி அறிக்கைகளை உருவாக்க நிகழ்நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆவணங்களை Gemini மூலம் பகுப்பாய்வு செய்யலாம். இதனால் தேடலில் பல மணிநேரம் செலவிடுவதைத் தவிர்த்து உங்கள் கட்டுரைகளையும் திட்டப்பணிகளையும் தொடங்குவதற்கான உத்வேகத்தைப் பெறலாம்.

Gemகளுக்கான அணுகல் மூலம் உங்கள் ஃபைல்களைப் பயன்படுத்தி, உங்கள் பாடத் திட்டங்கள் மற்றும் புத்தகங்களில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் உங்களுக்கான தனிப்பட்ட ஸ்டடி பார்ட்னரைக் கட்டமைக்கலாம். இதன்மூலம் பதில்களையும் பயிற்சிப் பாடப்புத்தகங்களையும் விரைவாக உருவாக்கலாம். மேலும், மிகவும் திறம்பட கற்றுக்கொள்ள உங்களுக்கான பிரத்தியேக வடிவத்தில் முதல் வரைவுகளையும் உருவாக்கலாம்.

முழுமையான புத்தகங்கள், உங்களின் ஆய்வறிக்கை அல்லது தொழில்நுட்ப ஆவணங்களைப் பதிவேற்றி, பல அத்தியாயங்கள் தொடர்பான அல்லது முழுப் புத்தகத்தையும் பற்றிய கேள்விகளைக் கேட்கலாம். பக்கங்களைத் திருப்ப வேண்டிய தேவையோ கடைசியாகப் படித்த இடத்தை நினைவில்கொள்ள வேண்டிய அவசியமோ இல்லை. ஒரே இடத்தில் ஒட்டுமொத்த விவரக் காட்சியையும் துல்லியமான விவரங்களையும் பெறலாம்.

Renaissance style painting
Study icon
Your study partner

மிகக் கடினமான திட்டப்பணிகளையும் கருத்தாக்கம் முதல் உருவாக்கம் வரை விரைவாகச் செய்து முடியுங்கள்

Deep Research மூலம், உங்களுக்காகச் சில நிமிடங்களிலேய போட்டியாளர் பகுப்பாய்வுகள் முதல் தொழில்துறை மேலோட்டங்கள் வரை விரிவான ஆராய்ச்சி அறிக்கைகளை உருவாக்க நிகழ்நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆவணங்களை Geminiயால் பகுப்பாய்வு செய்ய முடியும். தேடலில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து செயலில் ஈடுபட இது உங்களுக்கு உதவுகிறது.

Gemகளைப் பயன்படுத்தி, பார்வையாளர் மற்றும் நிபுணர் புள்ளிவிவரங்களில் தகவல்களை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு பிரத்தியேகக் கூட்டாளியை உங்களுக்கென்று உருவாக்கலாம். இதன் மூலம், உங்கள் சமீபத்திய கருத்தாக்கங்கள் தொடர்பான விரிவான கருத்துகளைக் பெறலாம், உங்கள் பாணியில் எழுதப்பட்ட முதல் வரைவுகளை உருவாக்கலாம், மேலும் பலவற்றைச் சில வினாடிகளில் செய்து முடிக்கலாம்.

1500 பக்கங்கள் வரை கொண்ட, வாடிக்கையாளர் கருத்துகள் முதல் பிசினஸ் திட்டங்கள் வரை பல வகையான ஆவணங்களைப் பதிவேற்றி, உங்கள் தரவைப் பகுப்பாய்வு செய்ய, முக்கியப் புள்ளிவிவரங்களைக் கண்டறிய, விளக்கப்படங்களை உருவாக்க நிபுணர் அளவிலான உதவிகளைப் பெறலாம். குறிப்பிட்ட திட்டப்பணிகள் தொடர்பான உங்கள் பணிகளை மிக எளிதாகப் பிரத்தியேகமாக்கவும் இது உதவுகிறது.

Your ideas generator

உங்கள் கோடிங் செயல்திறனை மேம்படுத்துங்கள்

அடுத்த தலைமுறை கோடிங் திறன்களுடன் மிக எளிமையாகவே முழுமையான கோடிங் பிளாக்குகளையும், யூனிட் டெஸ்ட்டுகளையும் உருவாக்கலாம், மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய கோடிங் பணிகளைத் தன்னியக்கமாக்கலாம். உயர் தரத்திலான வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் கவனம் செலுத்த இது உங்களுக்கு உதவுகிறது.

அதிகபட்சம் 30 ஆயிரம் வரிகள் வரையுள்ள உங்கள் கோடிங் தரவு சேமிப்பகத்தைப் பதிவேற்றி, Gemini Advanced மூலம் பல உதாரணங்களைச் செயலாக்கிப் பார்க்கலாம், பயனுள்ள மாற்றங்களின் பரிந்துரைகளைப் பெறலாம், சிக்கலான கோடிங் தளங்களைப் பிழைதிருத்தலாம், பெரிய அளவிலான செயல்திறன் மாற்றங்களை மேம்படுத்தலாம், கோடிங்கின் பல்வேறு பாகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் பற்றிய விளக்கங்களைப் பெறலாம்.

கூட்டுப்பணி செய்யக்கூடிய AI சூழலிலேயே தீர்வுகளைக் கலந்தாலோசிக்கலாம், வடிவமைப்பு யோசனைகள் குறித்து உரையாடலாம், தனிப்பட்ட திட்டப்பணிகள் அல்லது நீண்ட கால மேம்பாட்டிற்கான உங்கள் திறன்களை மெருகேற்ற உதவும் வகையில் உங்கள் கோடிங் மீதான நிகழ்நேரக் கருத்துகளைப் பெறலாம்.

Code example
Your code generator

Gmail, Docs மற்றும் பலவற்றில் பயன்படுத்தக்கூடிய Gemini, 2 TB சேமிப்பகம் மற்றும் Google One வழங்கும் பல பலன்களையும் பெறுவீர்கள்

Gmail icon

Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

உங்கள் தினசரிப் பணிகளை எளிதாக்கலாம், உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸில் எழுதுதல், ஒழுங்கமைத்தல், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உதவிகளை நேரடியாகப் பெறலாம் (சில மொழிகளில் மட்டும் கிடைக்கிறது).

Image showing Gemini in Gmail
Google One icon

2 TB Google One சேமிப்பகம்

Google Drive, Gmail, Google Photos ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய 2 TB சேமிப்பகத்துடன் உங்கள் நினைவுகளையும் ஃபைல்களையும் காப்புப் பிரதி எடுத்து வைக்கலாம். அத்துடன், Google தயாரிப்புகளில் பல பலன்களையும் பெற்று மகிழுங்கள்.

Image of storage usage in Google One
NotebookLM Plus icon

NotebookLM Plus

நீங்கள் வழங்கும் தகவல்களில் இருந்து மிக முக்கியமான புள்ளிவிவரங்களை விரைவாகக் கண்டறிய உதவும் NotebookLM Plus உடன் அதிகமான உபயோக வரம்புகளையும், பிரீமியம் அம்சங்களையும் பெறுங்கள்.

Image showing various data sources that can be used in NotebookLM Plus

1 மாத இலவச உபயோகத்தைத் தொடங்குங்கள்

பொதுவான கேள்விகள்

Gemini Advanced மூலம் மிகவும் சிக்கலான திட்டப்பணிகளைக் கையாளலாம், Googleளின் அடுத்த தலைமுறை AIக்கான முழு அணுகலையும் பெறலாம். எங்களின் மிகவும் திறன்வாய்ந்த AI மாடல்கள், புதிய அம்சங்களுக்கான முன்னுரிமை அணுகல், 10 லட்சம் டோக்கன் அளவுடைய சூழல் நினைவுத்திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி மகிழுங்கள்.

Google One AI Premium திட்டத்தின் ஒரு பகுதியாக, எங்களின் மிகவும் திறன் வாய்ந்த AI மாடல்களுடன் கூடிய Gemini Advanced 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது, திட்டத்தில் இவையும் அடங்கும்:

  • Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

  • 2 TB சேமிப்பகம்

  • மற்றும் பிற பலன்கள்

அத்துடன் நீங்களே நிர்வகிக்கும் தனிப்பட்ட Google கணக்கு தேவை. மேம்படுத்தும் முறை

புதிய Google One AI Premium திட்டத்தின் ஒரு பகுதியாக, எங்களின் மிகவும் திறன் வாய்ந்த AI மாடல்களுடன் கூடிய Gemini Advanced 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது, திட்டத்தில் இவையும் அடங்கும்:

  • Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

  • 2 TB சேமிப்பகம்

  • மற்றும் பிற பலன்கள்

அத்துடன் நீங்களே நிர்வகிக்கும் தனிப்பட்ட Google கணக்கு தேவை.

நீங்கள் தகுதிபெற்றால், இப்போதே Gemini Advancedக்கு மேம்படுத்தலாம். Gemini ஆப்ஸில் இருந்தே நேரடியாக மேம்படுத்தலாம்: மெனுவில் உள்ள ‘மேம்படுத்து’ பட்டனைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.

ஆம், ஆனாலும் Gemini மொபைல் ஆப்ஸிற்கும் Gemini இணைய ஆப்ஸிற்கும் இடையே சில அம்சங்கள் வேறுபடலாம். மேம்படுத்தும் முறை

மொபைல் ஆப்ஸில் உங்கள் Gemini Advanced சந்தாவை நிர்வகிக்க விரும்பினால், உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி அமைப்புகள் மெனுவிற்குச் செல்லவும்.

சரியான பணிக்குச் சரியான மாடலைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிறந்த அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நினைப்பதன் அடிப்படையில் குறிப்பிட்ட பணிகளுக்கு எங்களிடம் உள்ள பல்வேறு மாடல்களைப் பயன்படுத்துகிறோம்.

Gemini Advanced மூலம், எங்களின் மிகவும் திறன்வாய்ந்த AI மாடல்களுக்கான அணுகலைப் பெறலாம்.

உங்கள் கட்டணமற்ற உபயோகம் காலாவதியாகும் முன்பு எப்போது வேண்டுமானாலும் Google One AI Premium சந்தாவை ரத்துசெய்யலாம். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியமென்றாலே தவிர, பில்லிங் காலங்களின் இடையில் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. சந்தா செலுத்துவதன் மூலம், Google OneGoogle மற்றும் ஆஃபர்கள் தொடர்பான விதிமுறைகளை ஏற்கிறீர்கள். தரவை Google எப்படிக் கையாளுகிறது என்பதைப் பாருங்கள். Gemini Advanced மற்றும் Gmail, Docs மேலும் பலவற்றுக்கான Geminiயை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். Gmail, Docs மேலும் பலவற்றுக்கான Gemini குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது. கட்டண வரம்புகள் பொருந்தக்கூடும்.

  • 1

    எங்களின் பரிசோதனை மாடல்கள் மிகவும் பாதுகாப்பானதுடன் எங்கள் அணுகுமுறை மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணங்கக்கூடியவை. இருப்பினும் இவை ஓர் ஆரம்பக்கட்ட முன்னோட்டம் என்பதால் எதிர்பார்த்தபடி இயங்காமல் போகலாம். அத்துடன், சில Gemini அம்சங்கள் அவற்றின் பரிசோதனைக் கட்டத்தில் இந்த மாடல்களுடன் இணக்கமின்றி இருக்கலாம்.

  • 2

    சாதனம், நாடு, மொழி ஆகியவற்றைப் பொறுத்து இதன் கிடைக்கும்நிலை மாறுபடலாம். முடிவுகள், விளக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே அத்துடன் அவை மாறுபடலாம். பதில்களின் துல்லியத்தன்மையைச் சரிபார்த்துக்கொள்ளவும்.