ஒரே நேரத்தில் பல ஆப்ஸ் பணிகளுக்கான உதவியைப் பெறுங்கள்
ஆப்ஸ் மூலம் இப்போது நீங்கள் Gmailலில் இருந்து சுருக்க விவரங்களைப் பெறலாம், Google Keepபில் உள்ள மளிகைப் பொருள் பட்டியலில் பொருட்களை எளிதாகச் சேர்க்கலாம், உங்கள் நண்பருக்கான பயண உதவிக்குறிப்புகளை Google Mapsஸில் உடனடியாகச் சேர்க்கலாம், YouTube Musicகில் பிரத்தியேகப் பிளேலிஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம், பலவற்றைச் செய்யலாம்.
உங்கள் மின்னஞ்சல்களில் இருந்து தேவையான தகவல்களைக் கண்டறியுங்கள்
குறிப்பிட்ட சில தொடர்புகள் அனுப்பிய மின்னஞ்சல்களின் சுருக்கவிவரத்தை அளிக்கும்படியோ உங்கள் இன்பாக்ஸில் உள்ள குறிப்பிட்ட தகவலைத் தேடும்படியோ Geminiயைக் கேளுங்கள்.
புதிய இசையைக் கேட்டு மகிழுங்கள்
உங்களுக்குப் பிடித்த பாடல்கள், கலைஞர்கள், பிளேலிஸ்ட்டுகளைத் தேடிக் கண்டறிந்து பிளே செய்யலாம். எந்தவொரு தருணத்திற்கும் ஏற்ற பிளேலிஸ்ட்டை Gemini மூலம் உருவாக்கலாம். உதாரணத்திற்கு, 2020ல் இருந்து வெளியான, அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேலிஸ்ட்.
உங்கள் நாளைச் சிறப்பாகத் திட்டமிடுங்கள்
Gemini மூலம் உங்கள் கேலெண்டரை ஒழுங்கமையுங்கள், நிகழ்வுகளைக் கவனத்தில் வைத்திருங்கள். இசைக் கச்சேரியின் விளம்பர நோட்டீஸைப் படமெடுத்து, அதில் உள்ள விவரங்களின் அடிப்படையில் கேலெண்டர் நிகழ்வை உருவாக்கும்படி Geminiயைக் கேட்கலாம்.
நம்பகமான பாடப்புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
Geminiயால் ரைஸ் பல்கலைக்கழகத்தின் லாப நோக்கமற்ற கல்வி சார்ந்த முன்னெடுப்பான OpenStax மூலம் பாடப்புத்தகங்களில் இருந்து தகவல்களைப் பெற முடியும். எந்தவொரு கருத்தாக்கம் அல்லது தலைப்பு குறித்தும் Geminiயிடம் கேட்டு, தொடர்புடைய பாடப்புத்தக உள்ளடக்கத்திற்கான இணைப்புகளுடன் கூடிய சுருக்கமான விளக்கங்களைப் பெறலாம்.