Skip to main content

Gemini Canvas

உங்கள் யோசனைகளை ஆப்ஸ், கேம்கள், தகவல் விளக்கப்படங்கள் மற்றும் பல வகைகளாக மாற்றி, அவற்றுக்கு உயிரூட்டுங்கள். எங்களின் மிகவும் திறன்வாய்ந்த மாடலான Gemini 2.5 Proவின் ஆற்றல் மூலம் சில நிமிடங்களிலேயே ப்ராம்ப்ட்டை முன்வடிவமாக மாற்றுங்கள்.

Canvas என்றால் என்ன?

காட்சியாக மாற்றுங்கள் & பிரத்தியேகமாக்குங்கள்

உங்கள் Deep Research அறிக்கைகளை ஆப்ஸ், கேம்கள், இன்டராக்டிவ் குவிஸ், இணையப் பக்கங்கள், தகவல் விளக்கப்படங்கள் போன்றவையாக மாற்றி நீங்கள் கற்கும், தெரிந்துகொள்ளும், புள்ளிவிவரங்களைப் பகிரும் விதத்தை மேம்படுத்துங்கள்.

ப்ராம்ப்ட் வழங்கி உருவாக்குங்கள்

உங்கள் யோசனையை விவரித்தால் போதும், அதைச் செயல்படக்கூடிய, பகிரக்கூடிய ஆப்ஸ் அல்லது கேமாக மாற்றும் கோடிங்கை Canvas உருவாக்கும்.

வரைவை உருவாக்கி மேம்படுத்துங்கள்

சுவாரசியமான வரைவுகளை உருவாக்குதல், அதன் தொனியைச் சிறப்பாக்குதல், முக்கியப் பிரிவுகளைச் சீராக்குதல், உடனடி மற்றும் உதவிகரமான கருத்துகளைப் பெறுதல் ஆகியவற்றின் மூலம் நீங்கள் எழுதியதை மேம்படுத்துங்கள்.

கற்றல் வழிகாட்டிகளையும் ஆவணங்களையும் பதிவேற்றுங்கள், கற்றலை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் பிரத்தியேகமான குவிஸை Gemini உருவாக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் புரிதலை மதிப்பிடலாம் அல்லது வேடிக்கையான சவாலுக்காக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைப்பைப் பகிரலாம்.

சிக்கலான யோசனைகளைத் தெளிவான குறிப்புகளாக மாற்றி, கோடிங் செயல்படும் விதத்தை விளக்குகின்ற அல்காரிதங்களின் அனிமேஷன்களைப் பார்த்து கடினமான கருத்தாக்கங்களை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

Gemini மூலம் உங்கள் ஆவணங்கள், ஆய்வுகள், பேச்சுரைகள் போன்றவற்றை மேம்படுத்துங்கள். முக்கியப் பிரிவுகளை விரிவுபடுத்தவும், தொனியைச் சரிசெய்யவும், உங்கள் வரைவு குறித்த பயனுள்ள கருத்தைப் பெறவும் விரைவு எடிட்டிங் கருவிகள் உதவுகின்றன.

கலந்து ஆலோசித்தல், பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவற்றில் Geminiயின் உதவியைப் பெற்று விரைவாகப் பகுப்பாய்வு செய்து உத்திகளை வகுத்திடுங்கள், உயர்தரமான தயாரிப்புகளைச் சீக்கிரம் மேம்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்துங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுங்கள்.

குழு கண்காணிப்புகள் முதல் வாடிக்கையாளர் நிர்வாக அமைப்புகள் மற்றும் சேல்ஸ் பைப்லைன்கள் வரை எல்லாவற்றுக்கும் பிரத்தியேக டாஷ்போர்டுகளை உருவாக்கி உங்கள் குழுக்களின் பணியை எளிதாக்குங்கள். இது எல்லோருக்கும் தகவல்களைத் தெரிவித்து, பணி செய்யும் முறைகளை ஒழுங்குபடுத்தும்.

இன்டராக்டிவ் விலை ஸ்லைடர் மூலம் நிகழ்நேரத்தில் மதிப்பீடுகளை விரைவுபடுத்திப் பிரத்தியேகமாக்குங்கள். உரையாடல்களை ஊக்குவித்து, கன்வெர்ஷனை அதிகரிக்கும் வகையிலான உடனடி, பிரத்தியேகப் பரிந்துரைகளை வழங்கும் திறனை உங்கள் குழுவிற்குக் கொடுங்கள்.

உங்களுக்கான கற்பனையான 3D உலகங்களை உருவாக்குங்கள். தனித்துவமான அமைப்புகளுடன் கூடிய பல்வேறு கிரகங்களை உடனடியாக உருவாக்க ஸ்பேஸ்பாரை அழுத்தினால் போதும்.

வேடிக்கையான சவாலுக்கு உங்கள் ஆடியோ நினைவாற்றலைப் பரிசோதித்துப் பாருங்கள். கார்டுகளைக் கிளிக் செய்து ஒலிகளைக் கேளுங்கள், பொருந்தும் ஜோடிகளைக் கண்டறியுங்கள்.

ஒலியைச் சோதித்து உங்கள் சொந்த மெலடிகளை உருவாக்க, டிஜிட்டல் சின்தசைசரில் இசையமையுங்கள்.

அல்காரிதங்கள் செயல்படும் விதத்தைக் காட்சியாகப் பாருங்கள், எ.கா. Breadth-First Search அல்காரிதம். தொடங்கும் புள்ளியில் இருந்து முடியும் புள்ளி வரை அல்காரிதத்தின் பாதையைப் பின்தொடர இந்தக் கட்டத்தைப் பயன்படுத்துங்கள். தடைகள் இருந்தாலும் கூட மிகக் குறுகிய பாதையைக் கண்டறியும்போது, அந்தப் பாதையில் உள்ள எல்லாக் கலங்களும் ஒளிர்வதைப் பாருங்கள்.

பொதுவான கேள்விகள்

தொடங்குவது எளிது. ப்ராம்ப்ட் வழங்குவதற்கான பெட்டிக்குக் கீழே உள்ள “Canvas” என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆவணத்தையோ கோடிங் திட்டப்பணியையோ தொடங்க உங்கள் ப்ராம்ப்ட்டை டைப் செய்யுங்கள்.

எல்லா Gemini பயனர்களுக்கும் Canvas கிடைக்கிறது. Google AI Pro மற்றும் Google AI Ultra சந்தாதாரர்களுக்கு, எங்களின் மிகவும் திறன்வாய்ந்த மாடலான Gemini 2.5 Pro, மிகவும் சிக்கலான திட்டங்களுக்குப் பெரிதும் உதவக்கூடிய 10 லட்சம் டோக்கன் சூழல் நினைவுத்திறன் அளவு ஆகியவற்றுடன் கூடிய Canvasஸிற்கான அணுகல் உள்ளது.

ப்ராம்ப்ட் வழங்குவதற்கான பெட்டிக்குக் கீழே உள்ள Deep Research என்பதைத் தேர்ந்தெடுங்கள். புதிய Canvasஸில் உங்கள் Deep Research அறிக்கை உருவாக்கப்படும். ஆய்வு முடிந்ததும், Canvasஸின் மேல் வலதுபுறத்தில் “உருவாக்கு” பட்டன் காட்டப்படும். “உருவாக்கு” என்பதைக் கிளிக் செய்தால் இணையப் பக்கம், தகவல் விளக்கப்படம், குவிஸ், ஆடியோ தகவல் சுருக்கம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான விருப்பங்கள் அடங்கிய கீழ் தோன்றும் மெனு காட்டப்படும். இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Canvas அதற்கு உயிரூட்டுவதைப் பாருங்கள்.

ஆம், மொபைல் ஆப்ஸில் உங்கள் Canvas திட்டப்பணிகளை அணுக முடியும். ஆனால், டெஸ்க்டாப்பின் Gemini இணைய ஆப்ஸில் மட்டுமே வார்த்தையின் ஸ்டைலையும் வடிவத்தையும் மாற்ற முடியும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மொபைல் சாதனங்களில் இதைச் செய்ய முடியாது.

Gemini ஆப்ஸ் கிடைக்கக்கூடிய எல்லா மொழிகளிலும் நாடுகளிலும் Gemini பயனர்களுக்கு Canvas கிடைக்கிறது.