Gemகள் மூலம் பிரத்தியேக நிபுணர்களை உருவாக்குங்கள்
Gemகள் எந்த ஒரு தலைப்பு குறித்தும் உதவக்கூடிய பிரத்தியேக AI நிபுணர்கள் ஆகும். Gemகளால் உங்களுக்கு ஒரு கேரியர் கோச், கலந்து ஆலோசிப்பதற்கான பார்ட்னர், கோடிங்கில் உதவுபவர் என்று எப்படி வேண்டுமானாலும் செயல்பட முடியும். எங்களின் தயார்நிலை Gemகள் தொகுப்பைப் பயன்படுத்தலாம் அல்லது உங்களின் பிரத்தியேகத் தேவைகளுக்கேற்ப உங்களுக்கான பிரத்தியேக Gemகளை நீங்களே உருவாக்கலாம்.
கூடுதல் செயல்திறனுடன் செயல்படுங்கள்
நீங்கள் அடிக்கடி தொடர்ந்து மேற்கொள்ளும் பணிகளுக்கான மிக விரிவான ப்ராம்ப்ட் வழிமுறைகளைச் சேமிக்க Gemகள் உதவுகின்றன. இதன் மூலம் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி ஆழமான, அதிக படைப்பாற்றல் மிக்க கூட்டுப்பணிகளில் கவனம் செலுத்தலாம்.
உங்கள் ஃபைல்களைப் பதிவேற்றுங்கள்
பிரத்தியேக Gemகள் அதிகப் பயனுள்ளதாக இருக்க, அவற்றுக்குத் தேவையான சூழலையும் தகவல்களையும் நீங்கள் வழங்கலாம்.
உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குங்கள்
ஒரு குறிப்பிட்ட தொனி மற்றும் ஸ்டைலில் எழுதவோ, ஒரு சிறப்புத் தலைப்பில் நிபுணத்துவ அறிவைப் பெறவோ நீங்கள் Gemமைப் பயன்படுத்தலாம். அத்தகைய சூழல்களில் Gemகளால் உங்கள் பணிச் செயல்திறனை அதிகரிக்க முடியும்.