Skip to main content

ப்ராம்ப்ட்டின் மூலம் உங்கள் படங்களை மேம்படுத்துங்கள்

உங்கள் படங்களை இன்னும் மேம்படுத்துங்கள். வெவ்வேறு காட்சிகளில் நீங்கள் இருப்பதாக நினைத்துப் பாருங்கள், கிரியேட்டிவ் உறுப்புகளை ஒன்றிணையுங்கள், தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள் மற்றும் பலவற்றைச் செய்யுங்கள். உங்கள் கற்பனைத்திறனை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் படங்கள், உங்கள் கற்பனை

எப்படி வேண்டுமானாலும் உங்களைக் கற்பனை செய்யுங்கள்

வெவ்வேறு இடங்கள், உடைகள், ஹேர் ஸ்டைல்கள், காலங்கள் என எப்படி வேண்டுமோ அப்படி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

படங்களை ஒன்றிணையுங்கள்

பல படங்களைப் பதிவேற்றி, அவற்றின் உறுப்புகளை ஒன்றிணைத்து அனைத்தையும் ஒரே காட்சியாக மாற்றலாம்.

படங்களை ரீமிக்ஸ் செய்யுங்கள்

ஒரு ஆப்ஜெக்ட்டின் ஸ்டைல், வண்ணம், வடிவமைப்பு ஆகியவற்றை அப்படியே மற்றொரு ஆப்ஜெக்ட்டிற்கு மாற்றிப் பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் மாற்றங்களைச் செய்யுங்கள்

வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி உங்கள் படங்களில் உள்ள குறிப்பிட்ட உறுப்புகளை எளிதாக எடிட் செய்யுங்கள். படத்தை மீட்டெடுங்கள், பின்னணியை மாற்றுங்கள், சப்ஜெக்ட்டை மாற்றுங்கள் மற்றும் பலவற்றைச் செய்யுங்கள்.

நொடிகளில் படங்களை உருவாக்குங்கள்

வார்த்தைகளைப் படங்களாக மாற்றும் Imagen 4 என்ற எங்களின் உயர்தர மாடல் மூலம் பிரமிக்க வைக்கும் படங்களை Geminiயில் உருவாக்கலாம். உங்கள் யோசனைகளை விரிவான விவரங்களுடன் தத்ரூபமான படங்களாக எளிதில் உருவாக்கலாம்.

எழுத்து வடிவமைப்பின் அடிப்படையில் சொன்னால்…

வார்த்தைகளை மிகவும் துல்லியமான படங்களாக மாற்றுவதில் Imagen 4 ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது.

முற்றிலும் புதிய பரிமாணம்,
உங்கள் கண்முன்.

இதுவரையில் இல்லாத மேக்ரோ படங்கள்

எந்த ஸ்டைலிலும் கற்பனை செய்யுங்கள்

சாத்தியமில்லா விசயங்களை நிஜமான காட்சிகளாக்குங்கள்

பொதுவான கேள்விகள்

Gemini ஆப்ஸ் கிடைக்கக்கூடிய எல்லா மொழிகளிலும் நாடுகளிலும் AI பட உருவாக்க அம்சம் கிடைக்கிறது.

  1. எளிமையான முறையில் தொடங்குங்கள். <சப்ஜெக்ட்> <செயல்> <காட்சி> ஆகியவற்றின் படத்தை உருவாக்குof> என்று சொல்லுங்கள்< அதன் பிறகு, அதை மேம்படுத்துங்கள். உதாரணமாக, "ஜன்னல் விளிம்பில் சூரிய ஒளி படும் இடத்தில் தூங்கும் பூனையின் படத்தை உருவாக்கு."

  2. உங்களால் முடிந்த அளவு விவரங்களைத் தெளிவாகச் சொல்லுங்கள். ப்ராம்ப்ட்டுகளில் உங்களால் முடிந்த அளவு விவரங்களைச் சேர்க்க வேண்டும். எனவே "சிவப்பு நிற உடை அணிந்த பெண்ணின் படத்தை உருவாக்கு" என்று சொல்வதற்குப் பதிலாக "சிவப்பு நிற உடை அணிந்த இளம் பெண் பூங்காவில் ஓடுவதைப் போன்ற படத்தை உருவாக்கு" என்று சொல்லுங்கள். நீங்கள் எந்தளவு அதிகமான விவரங்களை வழங்குகிறீர்களோ அந்தளவு உங்கள் வழிமுறைகளை Gemini சிறப்பாகப் பின்பற்றும்.

  3. படத்தின் காட்சியமைப்பு, ஸ்டைல், தரம் ஆகியவற்றையும் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படத்தில் உறுப்புகளை எப்படி அமைக்க விரும்புகிறீர்கள் (காட்சியமைப்பு), நீங்கள் அடைய விரும்பும் விஷுவல் ஸ்டைல் (ஸ்டைல்), விரும்பிய அளவிலான படத் தரம் (படத் தரம்), தோற்ற விகிதம் (அளவு) ஆகியவை குறித்து யோசியுங்கள். “2:3 என்ற தோற்ற விகிதத்தில் ஆயில் பெயிண்டிங் ஸ்டைலில் விண்வெளியில் பறக்கும் மங்கலான சிறிய முள்ளம்பன்றியின் படத்தை உருவாக்கு” போன்றவற்றை முயன்று பாருங்கள்.

  4. படைப்பாற்றல் என்பது உங்கள் நண்பன். தத்ரூபமான ஆப்ஜெக்ட்டுகளையும் தனித்துவமான காட்சிகளையும் உருவாக்குவதில் Gemini சிறந்தது. உங்கள் கற்பனைக்கு எல்லை இல்லை.

  5. காட்டப்படும் முடிவு உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், அதை மாற்றும்படி Geminiயைக் கேளுங்கள். எங்கள் பட எடிட்டிங் மாடல் மூலம், உங்களுக்கு விருப்பமான விவரங்களை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, பின்னணியை மாற்றுதல், ஆப்ஜெக்ட்டை மாற்றுதல், ஓர் உறுப்பைச் சேர்த்தல் போன்றவற்றைச் செய்யும்படி Geminiயைக் கேட்டு உங்கள் படங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

எங்கள் AI கொள்கைகளுக்கு இணங்க, இந்த AI பட உருவாக்கக் கருவி பொறுப்புடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Gemini மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளுக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட உண்மையான ஆர்ட்வொர்க்குக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருப்பதை உறுதிசெய்ய, Gemini கண்ணுக்குத் தெரியாத SynthID வாட்டர்மார்க்கையும், தெரியும் வகையிலான இன்னொரு வாட்டர்மார்க்கையும் பயன்படுத்துகிறது. இவை காட்சிகள் AI ஜெனரேட்டட் என்பதைக் குறிக்கின்றன.

Gemini வழங்கும் பதில்கள் பயனர்களின் ப்ராம்ப்ட்டுகளை வைத்தே முதன்மையாகத் தீர்மானிக்கப்படுகின்றன. மற்ற ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் போலவே, இந்தக் கருவியும் சிலருக்கு ஆட்சேபனைக்குரியதாகத் தோன்றும் விஷயங்களை உருவாக்கக்கூடும். தம்ஸ்-அப் மற்றும் தம்ஸ்-டவுன் பட்டன்கள் மூலம் நீங்கள் வழங்கும் கருத்துகளை நாங்கள் தொடர்ந்து கவனிப்பதுடன், அதற்கேற்ப மேம்பாடுகளையும் செய்வோம். மேலும் விவரங்களுக்கு, எங்கள் அணுகுமுறை குறித்து எங்கள் இணையதளத்தில் படியுங்கள்.