பெரிய ஃபைல்கள், கோடிங் தரவு சேமிப்பகங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்
பரவலாகக் கிடைக்கும் எந்தவொரு சாட்பாட்டை விடவும் அதிகத் தகவல்களை Proவில் உள்ள Geminiயால் பகுப்பாய்வு செய்ய முடியும். 10 லட்சம் டோக்கன் சூழல் நினைவுத்திறன் அளவை இது கொண்டுள்ளதால் 1500 பக்க வார்த்தைகள் அல்லது 30 ஆயிரம் வரிகள் வரையுள்ள கோடிங்கை இதனால் ஒரே நேரத்தில் செயலாக்க முடியும்.
சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்ளுங்கள், ஸ்மார்ட்டாகக் கற்றுக்கொள்ளுங்கள்
ஒரு தலைப்பு தொடர்பான சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பாடப் புத்தகங்களையும் ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்து, உங்களுக்கான குறிப்பிட்ட பாடத்திட்டம் மற்றும் கற்றல் முறைக்கேற்ப உதவி பெறுங்கள். தேர்வுகள் மற்றும் படிப்புக்கான குறிப்புகளைக் கூட நீங்கள் உருவாக்கலாம்.
பல்வேறு ஃபைல்களில் இருந்து முக்கியக் குறிப்புகளைக் கண்டறியுங்கள்
போக்குகள், பிரச்சனைகள், அதிகரிக்கும் தேவைகள் ஆகியவற்றை அடையாளம் காண, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் கருத்துகள், சமூக வலைதளப் பதிவுகள், சப்போர்ட் டிக்கெட்டுகள் ஆகியவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்து வாடிக்கையாளர் கருத்துகள் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விளக்கக்காட்சியில் பயன்படுத்தும் வகையிலான விளக்கப்படங்களை உருவாக்குங்கள்.
கோடிங்கைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு செயல்படுத்துங்கள்
அதிகபட்சம் 30 ஆயிரம் வரிகள் வரையிலான கோடிங்கைப் பதிவேற்றி, திருத்தங்களுக்கான பரிந்துரைகள், பிழைதிருத்தங்கள், பெரிய அளவிலான செயல்திறன் மாற்றங்களை மேம்படுத்துவதில் உதவி, கோடிங்கின் வெவ்வேறு பகுதிகள் செயல்படும் விதம் தொடர்பான விளக்கம் ஆகியவற்றை Proவில் கிடைக்கும் Gemini மூலம் பெறுங்கள்.