Gemini வழங்கும் பிரத்தியேக உதவி
உங்கள் தேவையைப் புரிந்துகொண்டு வழங்கப்படும் AI உதவியைப் பெறுங்கள்.
உங்களுக்கான பிரத்தியேக உதவி
Gemini உதவியுடன், தனிப்பட்ட AI அசிஸ்டண்ட்டை உருவாக்குகிறோம். பொதுவான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்காமல், உங்களைப் புரிந்துகொண்டு, உங்கள் குறிப்பிட்ட ஆர்வங்கள், விருப்பங்கள், அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆகியவற்றுக்கு ஏற்ப அது தனது உதவியை வடிவமைக்கும். அதற்கான வழிமுறைகள்:
உங்கள் Search பதிவுகளின் அடிப்படையில் நீங்கள் பெறக்கூடிய மேலும் பல உதவிகளைக் கண்டறியுங்கள்
உங்கள் முன்னேற்றத்தின் அடுத்த படியைத் தொடங்குங்கள்
உங்கள் பிரத்தியேகக் குறிக்கோள்களுடனும் விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய பிரத்தியேகமாக்கப்பட்ட யோசனைகளைப் பெறுங்கள், இது உங்கள் அடுத்த திட்டத்தைத் தொடங்க உதவும்.
பிரத்தியேகப் பரிந்துரைகளைக் கண்டறியுங்கள்
உங்கள் பிரத்தியேகத் தேவைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படும் பரிந்துரைகளைப் பெறலாம், அவற்றின் மூலம் உங்கள் நேரத்தைச் சேமிக்கலாம், நீங்கள் உண்மையில் விரும்பக்கூடிய விஷயங்களைக் கண்டறியலாம்.
உங்களின் அறிந்துகொள்ளும் ஆர்வத்தைப் புதிய கோணத்தில் பாருங்கள்
உங்கள் டிஜிட்டல் பயணத்தின் அடிப்படையில் ஒரு தனித்துவமான, பிரத்தியேகக் கோணத்தைப் பெறலாம்.
உங்கள் தனியுரிமை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது
நாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு உறுதியளிப்பதோடு முழுக் கட்டுப்பாட்டையும் உங்களிமே வழங்குகிறோம்.
நீங்கள் விரும்புபவற்றைப் பகிருங்கள்
Geminiயின் பிரத்தியேகமாக்கல் அம்சங்கள் உங்கள் விருப்பத்திற்குட்பட்டவையே. உங்களின் Search பதிவுகளை இணைப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளைப் பகிர்வது, உரையாடல் பதிவுகளை இயக்குவது இவை எல்லாவற்றையும் நீங்களே தீர்மானிக்கலாம்.
உங்கள் தரவை எளிதாக நிர்வகியுங்கள்
சேமிக்கப்பட்ட தகவல், முந்தைய உரையாடல்கள் ஆகியவற்றை Gemini அமைப்புகளில் பார்க்கலாம் நிர்வகிக்கலாம். உங்கள் Search பதிவுகளையும் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடுகளில் நீங்கள் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.
நம்பத்தகுந்த வெளிப்படைத்தன்மை
பதில்களை Gemini எப்படிப் பிரத்தியேகமாக்குகிறது என்பதற்கான முழு விளக்கத்தை எங்கள் மேம்பட்ட சிந்தனை மாடல் வழங்குகிறது. மேலும், நீங்கள் சேமித்த தகவல், முந்தைய உரையாடல்கள், Search பதிவுகள் போன்ற எந்தெந்தத் தரவு மூலங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் காட்டுகிறது.
எளிதில் கிடைக்கும் பிரத்தியேக உதவி
சரியான தகவலை, சரியான நேரத்தில், சரியான வழியில் பெறலாம். ஒவ்வொரு நேரத்திலும் ஒரு உதவிகரமான பரிந்துரையை வழங்குவதன் மூலம், AI பிரத்தியேகமாக்கலுடன் கூடிய Gemini உங்கள் வாழ்வை எளிதாக்குகிறது.
பொதுவான கேள்விகள்
பிரத்தியேகமாக்கலுடன் கூடிய Gemini பொருத்தமான, பிரத்தியேகமான பதில்களை உங்களுக்கு வழங்குவதற்காக உங்கள் Search பதிவுகளைப் பயன்படுத்த Geminiயை அனுமதிக்கிறது.
இது உங்கள் ப்ராம்ப்ட்டைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், உங்கள் முந்தைய Search பதிவுகள் ஒரு பதிலை உருவாக்க உதவியாக இருக்குமா என்பதைத் தீர்மானிப்பதன் மூலமும் செயல்படுகிறது. நீங்கள் பெறும் தகவல் உங்கள் ஆர்வங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்கிறது.
Gemini 2.0 Flash Thinking மாடலில் பரிசோதனை அம்சமாக இந்தத் திறன் கிடைக்கிறது.
இது நாற்பதுக்கு மேற்பட்ட மொழிகளிலும், ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி, சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் ஆகியவற்றைத் தவிர உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளிலும் கிடைக்கிறது.