Skip to main content

Veo 3 மூலம் ஒளியில் ஒலி சேருங்கள்

எங்களின் சமீபத்திய AI வீடியோ ஜெனரேட்டரான Veo 3 மூலம் உயர்தரமான 8 வினாடி வீடியோக்களை உருவாக்கலாம். Google AI Pro திட்டத்தின் மூலம் அதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் அல்லது Ultra திட்டத்தின் மூலம் அதிகபட்ச அணுகலைப் பெறலாம். நீங்கள் மனதில் நினைப்பதை விவரித்தால் போதும், நேரடியான ஆடியோ உருவாக்கத்துடன் உங்கள் யோசனை வீடியோவாக உருவாவதைப் பார்க்கலாம்.

ஒரு கற்பனை. ஒரு வர்ணனை. போதும்.

புதிதாகக் கண்டறிவதற்கு

பல்வேறு ஸ்டைல்களைப் பயன்படுத்திப் பாருங்கள், அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுங்கள், இதுவரை இல்லாத புதுமையான முறைகளில் ஆப்ஜெக்ட்டுகளை ஒன்றிணைத்திடுங்கள். உங்களால் என்னவெல்லாம் உருவாக்க முடியும் என்று பாருங்கள்.

பகிர்வதற்கு

வேடிக்கையான மீம்களை உருவாக்குங்கள், குறிப்பிட்டவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஜோக்குகளை வீடியோக்களாக மாற்றுங்கள், சிறப்புத் தருணங்களை மேம்படுத்துங்கள் மற்றும் ஒருவரை மகிழ்விக்க தனித்துவமான விஷயங்களைச் சேருங்கள்.

கலந்து ஆலோசிப்பதற்கு

படைப்பாற்றலுக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்தெறிந்து உங்கள் யோசனைகளை நொடிப்பொழுதில் காட்சிகளாக மாற்றுங்கள். தயாரிப்பிற்கான கருத்தாக்கங்கள் மற்றும் டிசைன்கள் முதல் விரைவில் முன்வடிவத்தை உருவாக்கிக் கதை சொல்லுதல் வரை எல்லாவற்றுக்கும் Geminiயால் உதவ முடியும்.

எங்கள் Veo மாடல்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

Veo 3 Fast

Veo 3 Fast மாடல் மூலம் எளிய வார்த்தைகளையும் படங்களையும் பிரத்தியேக ஆடியோவுடன் கூடிய டைனமிக் வீடியோக்களாக Gemini மாற்ற முடியும்.

Google AI Pro திட்டத்தின் மூலம்
8 வினாடி வீடியோக்களை உருவாக்குங்கள்
உயர்தரம், மேம்படுத்தப்பட்ட வேகம்
புதிது
நேரடியான ஆடியோ உருவாக்கம்
Veo 3

எங்களின் அதிநவீன வீடியோ உருவாக்க மாடல் மூலம் ஆடியோவுடன் கூடிய உயர்தரமான 8 வினாடி வீடியோக்களை உருவாக்கலாம்.

Google AI Ultra திட்டத்தின் மூலம்
8 வினாடி வீடியோக்களை உருவாக்குங்கள்
அதிநவீன வீடியோ தரம்
புதிது
நேரடியான ஆடியோ உருவாக்கம்

பொதுவான கேள்விகள்

ஆம். உங்கள் Gemini மொபைல் ஆப்ஸில் வீடியோக்களை உருவாக்கலாம் பகிரலாம். வீடியோக்களை உருவாக்க, ப்ராம்ப்ட் வழங்குவதற்கான பெட்டியில் உள்ள "வீடியோ" பட்டனைத் தட்டவும். அந்த பட்டன் காட்டப்படவில்லை என்றால், மேலும் விருப்பங்களைப் பார்ப்பதற்கான மூன்று புள்ளிகளைக் கொண்ட பட்டனைத் தட்டவும்.

Google AI Pro திட்டத்தில் Veo 3 Fast பயன்படுத்திப் பார்க்கலாம் அல்லது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கும் Google AI Ultra மூலம் Veo 3க்கான அதிகபட்ச அணுகலைப் பெறலாம்.

Veo 3 மாடல்கள் கிடைக்காத நாடுகளில் Veo 2 கிடைக்கிறது.

AI வீடியோ உருவாக்க அம்சத்தை ஒரு பாதுகாப்பான அனுபவமாக மாற்ற முக்கியமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட விரிவான ரெட் குழு பரிசோதனையும் மதிப்பீடும் இதில் அடங்கும். அத்துடன், Gemini ஆப்ஸில் Veo மூலம் உருவாக்கப்படும் எல்லா வீடியோக்களிலும், தெரியும் வகையிலான ஒரு வாட்டர்மார்க் மற்றும் வீடியோவின் ஒவ்வொரு ஃபிரேமிலும் உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் வாட்டர்மார்க்   SynthIDஆகியவை இருக்கும். இவை வீடியோக்கள் AI ஜெனரேட்டட் என்பதைக் குறிக்கின்றன.

Gemini வழங்கும் பதில்கள் பயனர்களின் ப்ராம்ப்ட்டுகளை வைத்தே முதன்மையாகத் தீர்மானிக்கப்படுகின்றன. மற்ற ஜெனரேட்டிவ் AI கருவியைப் போலவே, இந்தக் கருவியும் சிலருக்கு ஆட்சேபனைக்குரியதாகத் தோன்றும் விஷயங்களை உருவாக்கக்கூடும். தம்ஸ்-அப் மற்றும் தம்ஸ்-டவுன் பட்டன்கள் மூலம் நீங்கள் வழங்கும் கருத்துகளை நாங்கள் தொடர்ந்து கவனிப்பதுடன், அதற்கேற்ப மேம்பாடுகளையும் செய்வோம். மேலும் விவரங்களுக்கு, எங்கள் அணுகுமுறை குறித்து எங்கள் இணையதளத்தில் படியுங்கள்.

முடிவுகள், திறனை விளக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே, அவை மாறுபடலாம். சில அம்சங்களைப் பயன்படுத்த இணையமும் சந்தாவும் தேவை. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கிடைக்கிறது. பொறுப்புடன் உருவாக்குங்கள்.