Google Gemini:
மாணவர்களுக்கு கட்டணமில்லா Pro திட்டம்.
1 வருடத்திற்கு கட்டணமில்லை. எங்கள் 2.5 Pro மாடல், Deep Research, ஆடியோ தகவல் சுருக்கங்கள் ஆகியவற்றுக்கான கூடுதல் அணுகலுடன் 2 TB சேமிப்பகமும் கிடைப்பதால் வரம்பற்ற உரையாடல்கள், படப் பதிவேற்றங்கள் மற்றும் குவிஸ் உருவாக்கங்களைப் பெறலாம். இந்த ஆஃபர் மாணவர்களுக்கு மட்டுமே. ஆஃபர் காலாவாதியாகும் தேதி: 6 அக்டோபர், 2025.
வரம்பற்ற படப் பதிவேற்றங்களைப் பெறுங்கள்
விரிவுரைக் குறிப்புகள் அல்லது பாடப்புத்தகக் கேள்விகளின் படங்களைப் பகுப்பாய்வு செய்து சிக்கலான தகவல்களுக்கு உடனடியாக விளக்கங்களைப் பெறலாம்.
தேர்வுக்குப் பிரத்தியேகமாகத் தயாராகுங்கள்
தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் உங்கள் சொந்த பாடத்திட்ட மெட்டீரியல்கள், குறிப்புகள், கேள்வித் தொகுப்புகள் ஆகியவற்றைப் பிரத்தியேகப் பயிற்சி குவிஸ்கள், ஃபிளாஷ் கார்டுகள் மற்றும் கற்றல் வழிகாட்டிகளாக மாற்றலாம்.
Deep Research அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் நேரத்தைச் சேமித்திடுங்கள்
சிக்கலான தலைப்புகளை இணையம் முழுவதிலும் ஆய்வு செய்து, ஆவணங்கள் மற்றும் மேற்கோள்களுடன் தொகுக்கப்பட்ட விரிவான அறிக்கையைப் பெறலாம். இதனால், பல மணிநேர வேலையை விரைவாகச் செய்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
Veo 3 மூலம் ஒளியில் ஒலி சேருங்கள்
Veo 3 Fast மாடல் மூலம் எளிய வார்த்தைகளையும் படங்களையும் பிரத்தியேக ஆடியோவுடன் கூடிய டைனமிக் வீடியோக்களாக Gemini மாற்ற முடியும்.
ஆடியோ தகவல் சுருக்கங்கள் மூலம் உங்கள் குறிப்புகளைக் கேளுங்கள்
விரிவுரை ரெக்கார்டிங்குகள் அல்லது பாடப்புத்தக அத்தியாயங்களைப் பாட்காஸ்ட் ஸ்டைல் ஆடியோ தகவல் சுருக்கமாக மாற்றி எங்கிருந்தும் படிக்கலாம்.
Gemini Live உடன் பேசுங்கள்
யோசனைகள் குறித்து பேசிக் கலந்து ஆலோசிக்கலாம், சிக்கலான தலைப்புகளை எளிதாக்கும்படி சொல்லலாம் மற்றும் நிகழ்நேரப் பதில்களின் உதவியுடன் விளக்கக்காட்சிகளுக்கு ஒத்திகை பார்க்கலாம். அத்துடன், உங்கள் கேமராவையோ திரையையோ Geminiயுடன் பகிர்வதன் மூலம் கடினமான கருத்தாக்கங்களைப் பிரித்தறியும் பிரத்தியேக உதவியைப் பெறலாம்.
வீட்டுப்பாட உதவி
நீங்கள் பணிபுரியும் படம் அல்லது ஃபைலைப் பதிவேற்றுங்கள். பதிலைப் பெறுவதற்கான வழிமுறையைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தெளிவான, படிப்படியான வழிகாட்டியுடன் Gemini அதை உங்களுக்கு விரிவாக விளக்கும்.
- ஒளிச்சேர்க்கையைப் படிப்படியாக விளக்கு
- இந்த ஆவணத்தை எனக்காகச் சுருக்கு
- பாளையக்காரப் போரின் காரணங்களையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் ஆராய்க
- இந்தக் கணக்கிற்குத் தீர்வு வழங்கு
தேர்வுக்குத் தயாராதல்
உங்கள் அடுத்த தேர்விற்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். குறிப்புகள், ஸ்லைடுகள் உள்ளிட்ட உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றி, அவற்றைக் கற்றல் வழிகாட்டியாகவோ பயிற்சித் தேர்வாகவோ பாட்காஸ்ட்டாகவோ கூட மாற்றுங்கள்.
- எனது வகுப்புக் குறிப்புகளை கற்றல் வழிகாட்டியாக மாற்று
- சுதந்திரப் போராட்டம் குறித்து என்னிடம் கேள்விகளைக் கேள்
- எனது விரிவுரை குறிப்புகளை சுருக்கமாகக் கூறு
- இணைக்கப்பட்ட இந்தக் குறிப்புகளைக் கொண்டு பாட்காஸ்ட்டை உருவாக்கு
எழுதுதலில் உதவி
முதல் வரைவில் இருந்து இறுதி வரைவு வரை: உங்கள் யோசனைகளைக் கலந்து ஆலோசிக்கவும், அதுகுறித்த விவரங்களைப் பெறவும், அதனை உடனடியாக ஒரு மேம்பட்ட படைப்பாக மாற்றவும் Gemini உதவுகிறது.
- எனது கட்டுரையைச் சரிபார்த்து, ஏதேனும் மாற்றங்களைப் பரிந்துரை
- இந்தப் பத்தியைச் சிறியதாகவும் தெளிவானதாகவும் மாற்று
- இந்த மின்னஞ்சலை மேலும் அலுவல் மொழியாக்கு
- எனது சுயவிவரத்தை மெருகேற்று
கூடுதலாக, Google AI Pro திட்டத்தின் பிரீமியம் பலன்களைப் பயன்படுத்தி மகிழுங்கள்.
Whisk மற்றும் Flow மூலம் பல வழிகளில் உருவாக்குங்கள்
Whisk உதவியுடன் படங்களைப் ப்ராம்ட்டுகளாகப் பயன்படுத்தி உங்கள் யோசனைகளைக் காட்சிகளாக மாற்றி, அதன் மூலம் உங்கள் கதையைச் சொல்லலாம். Veo 3 மாடலுடன் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட எங்கள் AI வீடியோ உருவாக்கக் கருவியான Flow மூலம் சினிமா பாணியில் காட்சிகளையும் கதைகளையும் உருவாக்கலாம்.
NotebookLM மூலம் ஸ்மார்ட்டாகப் படியுங்கள், ஆய்வு செய்யுங்கள்
நீங்கள் நம்பும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு நோட்புக்கிற்கும் 5 மடங்கு அதிக வீடியோ மற்றும் ஆடியோ தகவல் சுருக்கங்கள், நோட்புக்குகள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பெறலாம்.
2 TB சேமிப்பகத்தைப் பெறுங்கள்
பள்ளியின் புராஜெக்ட்டுகள், ஆராய்ச்சி, உயர் தெளிவுத்திறன் கொண்ட மீடியா, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுக்குக் கூடுதல் சேமிப்பகத்தைப் பெறலாம். இதனால் மிகவும் முக்கியமானவற்றுக்கு எப்போதும் சேமிப்பகத்தில் இடம் இருக்கும்.
ஆஃபரைப் பற்றி மேலும் அறியுங்கள்
தகுதிபெறும் மொழியில் நீங்கள் கல்லூரி மாணவராக இருக்க வேண்டும். நீங்கள் தகுதிபெற்றுள்ளீர்களா என்பதை இங்கே பாருங்கள்.
நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.
விரைந்து செயல்படுங்கள்! 6 அக்டோபர், 2025க்குள் நீங்கள் பதிவுசெய்ய வேண்டும்.
தகுதிபெற்றால், ஒரு வருடத்திற்குக் கட்டணமில்லா அணுகலைப் பெறுவீர்கள்.
அது சுலபம் தான்! உங்கள் தகுதிநிலையைச் சரிபார்க்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
Google Oneனுக்குச் செல்லுங்கள்.
SheerID மூலம் உங்களின் தற்போதைய மாணவர் நிலையை உறுதிப்படுத்துங்கள்.
தனிப்பட்ட Google கணக்கைக் கொண்டிருக்க வேண்டும்.
Google Payments கணக்கைக் கொண்டிருக்க வேண்டும், கேட்கப்படும்போது செல்லுபடியாகும் பேமெண்ட் முறையை வழங்க வேண்டும்.
கட்டணமற்ற உபயோகத்திற்கான பர்ச்சேஸ் செயல்முறையை நிறைவுசெய்யுங்கள்.
Google Play Store மூலம் Google AI Pro திட்டத்திற்குச் சந்தா சேருங்கள்.
இந்த ஆஃபரை ரிடீம் செய்வது தொடர்பான விரிவான வழிமுறைகளுக்கு எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள். உதவி மையத்தில் தகுதிநிலைத் தேவைகள், பிழையறிந்து திருத்துவதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தேவைப்பட்டால் உதவி மையத்தைத் தொடர்புகொள்வதற்கான இணைப்புகள் இருக்கும்.
இந்த ஆஃபர் உங்களுக்கு Google AI Pro திட்டத்தை வழங்குகிறது, அதில் கிடைப்பவை:
Gemini ஆப்ஸ்: உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அதிகரிக்க, ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களுக்கான கூடுதல் அணுகலைப் பெறுங்கள்.
Google ஆப்ஸில் Gemini: Gmail, Docs, Sheets, Slides மற்றும் Meetடில் நேரடியாக AI உதவியைப் பயன்படுத்தலாம்.
NotebookLM: AI திறனுள்ள ஆய்வு மற்றும் எழுத உதவும் கருவிக்கான மேம்பட்ட அம்சங்கள்.
2 TB கிளவுடு சேமிப்பகம்: Google Photos, Google Drive மற்றும் Gmailலுக்கு நிறைய சேமிப்பிடத்தைப் பெறலாம்.
Google One என்பது எங்களின் பிரீமியம் மெம்பர்ஷிப் திட்டமாகும், இது உங்கள் அனுபவத்தை மேலும் பயனுள்ளதாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேர்வதன் மூலம், Google AI Proவில் Gemini ஆப்ஸ் மட்டுமின்றி கூடுதல் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் விரிவான சேமிப்பகத்தையும் பெறலாம். இவற்றின் மூலம் Googleளில் இருந்து மேலும் பலன்கள் கிடைக்கும்.
நிச்சயமாக! கட்டணமற்ற உபயோக ஆஃபருக்கு நீங்கள் தகுதிபெற்றிருந்தால், 6 அக்டோபர், 2025க்குள் பதிவுசெய்யுங்கள். உங்கள் தற்போதைய சந்தா தானாகவே ரத்துசெய்யப்படும். உங்கள் பில்லிங் சுழற்சியில் மீதமுள்ள காலத்திற்கான பணம் உங்களுக்குத் திருப்பியளிக்கப்படும்.
உங்கள் தனிப்பட்ட Gmail கணக்கைப் பயன்படுத்தி இந்தக் குறிப்பிட்ட கட்டணமில்லா Google AI Pro உபயோக ஆஃபருக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
தெரிந்துகொள்ள வேண்டியவை: உங்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட Google Workspace கணக்கு ஆற்றல்மிகுந்த Google AI கருவிகளுக்கான (2.5 Pro செயல்திறன்களைக் கொண்ட Gemini ஆப்ஸ் மற்றும் NotebookLM போன்றவை) கட்டணமில்லா அணுகலையும் வழங்கக்கூடும். இது உங்கள் பல்கலைக்கழகத்தின் IT நிர்வாகி அவற்றை இயக்கியுள்ளாரா என்பதைப் பொறுத்ததாகும். அத்துடன், உங்கள் பல்கலைக்கழகக் கணக்கின் மூலம் என்னென்ன கருவிகள் கிடைக்கின்றன என்பதைப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்!
உங்கள் ஆஃபர் முடிய உள்ளதை நினைவூட்ட முன்கூட்டியே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும், கட்டணமற்ற உபயோகக் காலத்தின்போது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ரத்துசெய்யலாம்.
ஆஃபர் முடிவடையும் நாள்: 6 அக்டோபர், 2025. மாணவருக்கான Google AI Pro கட்டணமற்ற உபயோகங்களைப் பெற, அவை வழங்கப்படக்கூடிய தகுதிபெறும் உயர்கல்வி நிறுவனத்தில் நீங்கள் படிக்க வேண்டும். கட்டணமற்ற உபயோகத்திற்குப் பிறகு சந்தா தானாகவே மாதத்திற்கு $19.99 என்ற கணக்கில் புதுப்பிக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.
குறிப்பிட்ட அம்சங்களைப் பயன்படுத்த Google One AI Premium திட்டமும் இணையமும் இணக்கமான கணக்கும் தேவை. குறிப்பிட்ட நாடுகளிலும், மொழிகளிலும், 18+ வயதுடைய பயனர்களுக்கும் கிடைக்கிறது. பொறுப்புடன் உருவாக்குங்கள்.