Skip to main content

Geminiயை அறிமுகப்படுத்துகிறோம், உங்களுக்கான தனிப்பட்ட புதிய AI அசிஸ்டண்ட்

கடந்த 8 ஆண்டுகளில், பல கோடி மக்கள் தங்களின் அன்றாட பரபரப்பான வாழ்வில் அவர்களின் மொபைல்களிலிருந்தே பலவற்றைச் செய்ய Google Assistant உதவியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், இன்னும் பல அம்சங்கள் உங்கள் அசிஸ்டண்ட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்பியதை நாங்கள் அறிந்தோம்-குறிப்பாக உங்களுக்கான பிரத்தியேகமான ஒன்று, அதனுடன் நீங்கள் இயல்பாகப் பேசி உங்கள் தேவைகளைச் சொல்லவும் அதற்கேற்ப அது உங்களுக்கு உதவ வேண்டும் என்பதும் விருப்பமாக இருந்தது. எனவே, அதைப் பூர்த்தி செய்யும் வகையில் Googleளின் மிகத் திறன்வாய்ந்த AI மாடல்களைக் கொண்டு உங்கள் மொபைலுக்கான அசிஸ்டண்ட்டை முற்றிலும் புதுமையாக உருவாக்கியுள்ளோம்.

Gemini ஒரு புதிய வகை AI அசிஸ்டண்ட், மேம்பட்ட மொழிப் புரிதல் மற்றும் பகுத்தறிதலுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கைகளைப் பயன்படுத்தாமலேயே செயல்களைச் செய்ய Google Assistant உதவுவதுபோல் Gemini உதவுவது மட்டுமல்லாமல் அதனையும் தாண்டி, உரையாடல்களை இன்னும் ஆழமானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றி மிகச் சிக்கலான பணிகளில் கூட மிகத் திறம்பட உதவும் வகையில் Gemini உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இயற்கை மொழியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய Geminiயின் திறனால் பயனர்கள் மிகவும் பயன்பெறுகின்றனர் மற்றும் தங்கள் பணிகளை எளிதில் நிறைவுசெய்கின்றனர் என்பதை எங்களின் தொடர்ச்சியான பரிசோதனையில் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

Geminiக்கும் Google Assistantடிற்கும் இடையிலான ஒப்பீடு, அத்துடன் Gemini உங்களுக்கு உதவக்கூடிய சில புதிய வழிகள் இதோ. Geminiயை மிகவும் பயனுள்ள, தனிப்பட்ட AI அசிஸ்டண்ட்டாக மாற்ற நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். மேலும் உங்கள் கருத்துகளின் உதவியுடன் அதை விரைவாக மேம்படுத்துவதில் மிக அதிகக் கவனம் செலுத்துகிறோம். இந்த மேம்பாடுகள் தொடர்பான தகவல்களை இந்தப் பக்கத்தில் நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருவோம் மற்றும் கூடுதல் செய்திகளுக்கு Geminiயின் வெளியீடு தொடர்பான புதிய அறிவிப்புகளை நீங்கள் பார்க்கலாம். ஏதேனும் காரணத்திற்காக Gemini தற்போது உங்களுக்குப் பயனுள்ளதாக இல்லையெனில், அமைப்புகளில் Google Assistantடிற்கு மாறலாம். மேலும் அறிக.

Gemini மற்றும் Google Assistant ஒப்பீடு

Gemini சில அற்புதமான விஷயங்களைச் செய்யக்கூடியது. செயல்களைச் செய்ய AI உடன் நாம் எப்படி உரையாடலாம் என்பதில் இது ஒரு அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவருகிறது. நீங்கள் Geminiயைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இதோ:

  • ஏனெனில் Geminiயால் இயற்கை மொழிகளைப் புரிந்துகொள்ள முடியும், நீங்கள் சக மனிதரைப் போல Geminiயிடமும் பேசலாம், எழுதலாம், Geminiயும் நீங்கள் பேசுவதை எழுதுவதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்கும்.

  • Gemini பெரிய, அதிநவீன AI மாடல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதாவது சில சமயங்களில் எளிய கோரிக்கைகளுக்கு Google Assistantடை விட அதிக நேரம் எடுக்கலாம். இந்த விஷயத்தில் நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம், எனவே Gemini தொடர்ந்து இன்னும் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்

  • Google Assistantடை விட Geminiயால் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என்றாலும், Gemini எப்போதும் சரியாகப் பதிலளிக்கும் என்று சொல்லமுடியாது. Gemini வழங்கும் பதில்களை எங்களின் சரிபார்த்தல் அம்சம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம், Gemini வழங்கக்கூடிய பெரும்பாலான பதில்களில் உள்ள ஆதாரத் தகவல்களை இந்த அம்சம் மதிப்பாய்வு செய்யும். அல்லது, முக்கிய உண்மைத் தகவல்களுக்கு Google Searchசைப் பயன்படுத்துங்கள்.

இப்போது Geminiயில் கிடைக்கும் அல்லது விரைவில் வரவிருக்கும் Google Assistantடின் பிரபல அம்சங்கள் பட்டியல் இதோ. இவை உங்கள் மொபைல் மற்றும் பிற தகுதிபெறும் Android சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

முக்கியம்:
AI மூலம் மேம்படுத்தப்பட்டது. நீங்கள் கேட்க விரும்புவதை இயற்கையான மொழியில் சொல்லலாம் அல்லது டைப் செய்யலாம் மற்றும் சிக்கலான பணிகளுக்கு உதவியைப் பெறலாம், உதாரணமாக, பல ஆப்ஸ்களை ஒன்றாகப் பயன்படுத்துதல். புதிய அம்சங்கள் இன்று பயன்பாட்டிற்கு வரும்.
தற்போது Geminiயில் கிடைக்கிறது.
விரைவில் வருகிறது.
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை

உங்கள் மொபைல் பூட்டப்பட்டிருக்கும் போதும்: பதில்களைப் பெறலாம், அலாரம், டைமர்களை அமைக்கலாம், மீடியா இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம், சாதன அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம் & வழக்கங்களைப் பயன்படுத்தலாம்

Geminiயில் கிடைக்கும் நிலை

உங்கள் மொபைல் பூட்டப்பட்டிருக்கும் போதும்: கூடுதல் அம்சங்கள் (எ.கா. மின்னஞ்சல், அழைப்புகள், மெசேஜ், நினைவூட்டல்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல்)

Geminiயில் கிடைக்கும் நிலை
பிற மெசேஜ் ஆப்ஸ்
Geminiயில் கிடைக்கும் நிலை
PDF பற்றி கேட்டல்
(Gemini Advanced உடன் Android)
Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை

மொபைல் செயல்பாடுகள் (எ.கா. ஆப்ஸ், இணையதளம், கேமரா, அமைப்புகள் போன்றவற்றைத் திறத்தல்)

Geminiயில் கிடைக்கும் நிலை
Geminiயில் கிடைக்கும் நிலை
அம்சம் Geminiயில் கிடைக்கும் நிலை

உங்கள் மொபைல் பூட்டப்பட்டிருக்கும் போதும்: பதில்களைப் பெறலாம், அலாரம், டைமர்களை அமைக்கலாம், மீடியா இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம், சாதன அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம் & வழக்கங்களைப் பயன்படுத்தலாம்

உங்கள் மொபைல் பூட்டப்பட்டிருக்கும் போதும்: கூடுதல் அம்சங்கள் (எ.கா. மின்னஞ்சல், அழைப்புகள், மெசேஜ், நினைவூட்டல்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல்)

பிற மெசேஜ் ஆப்ஸ்
PDF பற்றி கேட்டல்
(Gemini Advanced உடன் Android)

மொபைல் செயல்பாடுகள் (எ.கா. ஆப்ஸ், இணையதளம், கேமரா, அமைப்புகள் போன்றவற்றைத் திறத்தல்)

Geminiயை நாம் இணைந்து மேம்படுத்துதல்

நாங்கள் உங்கள் கருத்துகளிலிருந்து தொடர்ந்து கற்று வருகிறோம் மற்றும் அதன் மூலம் Geminiயை இன்னும் வேகமாக்கவும் திறம்பட செயலாற்றவும் பணியாற்றி வருகின்றோம், இருந்தும் சில நேரங்களில் தவறுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. Geminiக்கான புதிய திறன்களை உருவாக்குவதில் நாங்கள் பணியாற்றி வரும் அதே வேளையில், அன்றாட அலுவல்களுக்கான அனுபவங்களை மேம்படுத்துவதிலும் முழுக்கவனம் செலுத்தி வருகின்றோம், குறிப்பாக Google Assistantடை சார்ந்து இருப்பவர்களுக்காக.

Geminiயின் பதில்களுக்கு தம்ஸ்-அப் அல்லது தம்ஸ்-டவுன் கொடுப்பதன் மூலம் உங்கள் கருத்தை நீங்கள் பகிரலாம். உங்கள் கருத்துகளைக் கேட்பதற்கு ஆவலாக உள்ளோம்.

சில மொழிகள் மற்றும் நாடுகளில், குறிப்பிட்ட சாதனங்கள் மற்றும் இணக்கமான கணக்குகளுக்குக் கிடைக்கும் அம்சங்கள் இணக்கமான உள்ளடக்கத்தில் மட்டுமே வேலை செய்யும். இணைய இணைப்பு, Android சாதனம் மற்றும் அமைத்தல் தேவைப்படும். துல்லியத்தன்மைக்குப் பதில்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.