macOSக்கான Gemini
உங்கள் டாக்கில் உள்ள மிகவும் ஸ்மார்ட்டான ஐகான்.
நீங்கள் எழுதினாலும், ஒழுங்கமைத்தாலும், யோசனைகளைக் கலந்தாலோசித்தாலும் ஷார்ட்கட் மூலம் Geminiயை எளிதாக அணுகலாம். உங்கள் திரையில் உள்ள சூழலைப் பயன்படுத்தி, உங்கள் செயல்பாட்டை நிறுத்தாமலேயே உடனடியாகப் பிரத்தியேக உதவியைப் பெறுங்கள்.
Gemini ஆற்றலுடன் இயங்கும் உங்கள் டெஸ்க்டாப்.
உங்கள் சிந்தனையின் வேகத்திலேயே உதவியைப் பெறுங்கள். ஷார்ட்கட்கள் மூலம் விரைவாகத் திறக்கலாம், குரல் மூலம் எடிட் செய்யலாம், ஆட்டோமேஷன் செய்ய Gemini Sparkகை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
Option + Space தான் எல்லாமே.
எளிதான ஷார்ட்கட் மூலம் உங்கள் Macகில் எங்கிருந்தும், பணியின் நடுவிலும் Geminiயைத் திறக்கலாம்.
உங்கள் கடினமான வேலைகளும் இனி சுலபமாக முடியும்.
உங்கள் ஃபோல்டர்களை ஒழுங்கமைக்க அல்லது சாதனத்தில் உள்ள ஃபைல்களை Google Docs மற்றும் Sheetsஸில் சுருக்க விவரமாகப் பெற Gemini Sparkகைப் பயன்படுத்தலாம். இது தன்னிச்சையாகச் செயல்படும், ஆனால் எப்போதும் உங்கள் வழிகாட்டுதலின் படியே இயங்கும்.
பயன்படுத்திப் பாருங்கள்: ஆதரிக்கப்படும் நாடுகளில் 18 வயது நிரம்பிய Google AI Ultra பயனர்களுக்கு முதற்கட்டமாக ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது.
டெஸ்க்டாப்பிற்கான படைப்பாற்றல்
Nano Banana மூலம் படங்களை உருவாக்குவதில் இருந்து Veo மூலம் வீடியோக்களை உருவாக்குவது வரை, நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் ஆற்றல்மிக்க கிரியேட்டிவ் தொகுப்பு ஒரே கிளிக்கில் தயாராக இருக்கும்.
வேலைப்பளு மிகுந்த நாட்களை எளிதாக்க உதவும் உதவிக்குறிப்புகள்.
டெஸ்க்டாப்பில் உங்கள் பணிகளைச் செய்து முடிக்க புதிய வழிகளைக் கண்டறியுங்கள்.
கட்டளையிடுங்கள். கட்டளையிடுங்கள். வென்று காட்டுங்கள்.
உங்கள் திரையில் உள்ள எதையும் நேரடியாக உரையாடலில் சேர்க்க ⌘ + ⌘ அழுத்துங்கள். பிழைகளைத் திருத்தவும், விளக்கப்படங்களை அலசி ஆராயவும், புதிய காட்சி யோசனைகளைக் கண்டறியவும் உடனடி உதவி பெறுங்கள்.
உங்கள் Mac. உங்கள் விதிகள்.
எங்களின் இயல்பு ஷார்ட்கட்கள் மூலம் விரைவாகப் பயன்படுத்தத் தொடங்குங்கள். அதை மாற்ற விரும்புகிறீர்களா? அமைப்புகளிலேயே ஒவ்வொரு ஷார்ட்கட்டையும் பிரத்தியேகமாக்கலாம்.
குழப்பங்களுக்கு மத்தியிலும் தெளிவைக் கண்டறியுங்கள்.
நீங்கள் தேர்வுசெய்யும் உங்கள் சாதனத்திலுள்ள ஃபைல்களை Gemini ஆராய அனுமதிப்பதன் மூலம், சரியான தகவல்களுடன் சூழலுக்கு ஏற்ற உதவியைப் பெறலாம்.
பொதுவான கேள்விகள்
Gemini ஆப்ஸ் ஆதரிக்கப்படும் எல்லா மொழிகளிலும் நாடுகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தக்கூடிய டெஸ்க்டாப் AI அசிஸ்டண்ட்டாக Gemini macOS ஆப்ஸ் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் Apple Silicon MacBooksஸில் மட்டுமே இயங்கும். மேலும் இதற்கு macOS Sequoia (15.0) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. அம்சத்தின் கிடைக்கும்நிலை மாறுபடும்.
டெஸ்க்டாப்பில் Gemini ஆப்ஸை அணுக பல விரைவான வழிகள் உள்ளன:
-
பிரத்தியேகமாக்கக்கூடிய ஷார்ட்கட்கள்: சிறிய உரையாடலைத் திறக்க Option + Space அழுத்துங்கள் அல்லது முழு உரையாடல் அனுபவத்திற்கு Option + Shift + Space அழுத்துங்கள்.
-
மெனு பட்டி: உங்கள் திரையின் மேற்பகுதியில் உள்ள மெனு பட்டியில் இருக்கும் Gemini ஐகானைத் தேர்ந்தெடுங்கள்.
-
Mac Dock: Dockகில் உள்ள ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் ஆப்ஸை நேரடியாகத் தொடங்கலாம்.
மேலும் பிரத்தியேகமான பதிலைப் பெற உங்கள் திரையை Geminiயுடன் எளிதாகப் பகிரலாம். நீங்கள் பகிர விரும்பும் குறிப்பிட்ட சாளரத்தைத் திறந்து இரண்டு Command பட்டன்களையும் அழுத்துங்கள்.
உங்கள் உரையாடலுக்கான சூழலாக, முன்வரிசையில் உள்ள சாளரத்தில் காட்டப்படும் உள்ளடக்கத்தை Gemini பயன்படுத்தும். பிரவுசரில் முழுப் பக்கங்களைப் படிக்க அல்லது சாதனத்தில் உள்ள பகிரப்பட்ட ஃபோல்டரில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து ஃபைல்களையும் அணுக அனுமதிக்க, உங்கள் macOS சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் சென்று Geminiக்கான அணுகல்தன்மையை ஆன் செய்யுங்கள்.
Gemini ஆப்ஸ் அமைப்புகளில், சாளரப் பகிர்வுக்கான ஷார்ட்கட்டை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
உங்கள் டெஸ்க்டாப்பில் குரல் மூலமாகவே புதியவற்றை உருவாக்கவும் எழுதவும் சில வழிகள் உள்ளன:
-
எங்கிருந்தும் எழுதவேண்டியவற்றைச் சொல்லுதல்: எந்த வார்த்தைப் பெட்டியிலும் இயல்பாகப் பேசி உங்கள் கர்சர் இருக்கும் இடத்திலேயே பிழையில்லாமல் வார்த்தைகளை உள்ளிடலாம்.
-
வார்த்தைகளை மேம்படுத்துதல்: எந்த ஆப்ஸில் உள்ள வார்த்தைகளையும் ஹைலைட் செய்து, அவற்றை எப்படி மாற்ற வேண்டும் என்று Geminiயிடம் சொல்லலாம் (தொனியை மாற்றுவது, மாற்றி எழுதுவது, வடிவமைப்பது போன்றவை).
-
ஃபைல்களின் சுருக்க விவரங்களைப் பெறுதல்: உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ஆவணங்கள், PDFகள் அல்லது படங்களை ஹைலைட் செய்து முக்கிய விவரங்களைப் பிரித்தெடுக்கும்படி Geminiயைக் கேட்கலாம்.
-
படங்களை உருவாக்குதல்: நீங்கள் விரும்பும் காட்சியை உங்கள் குரல் மூலமே விவரித்து, படங்களை உருவாக்கி அவற்றை நேரடியாக உங்கள் பணியிடத்தில் சேர்க்கலாம்.
பயன்படுத்தும் முறை: FN 🌐 பட்டனை அழுத்திப் பிடித்துப் பேசத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க அழுத்தியிருக்கும் பட்டனை விடுங்கள், Gemini அதற்கான பதிலை நேரடியாக உங்கள் தற்போதைய சாளரத்திலேயே வழங்கும்.
-
அறிவார்ந்த சொல்வதை எழுதும் வசதி: இது இயல்பாகவே செயல்பாட்டில் இருக்கும். இது நிரப்பு வார்த்தைகளைத் தானாகவே நீக்கி, நீங்கள் பேசும்போதே செய்யும் திருத்தங்களை உடனுக்குடன் கண்டறிந்து, உங்கள் கருத்துகளைப் புல்லட் பாயிண்ட்டுகளாகவும் நேர்த்தியான பத்திகளாகவும் அழகாக வடிவமைத்துக் கொடுக்கும்.
-
திரைச் சூழலுடன் கூடிய ரீசனிங் பணிகள்: அனுமதி தேவை. குரல் மூலம் சொல்வதை அப்படியே வார்த்தைகளாக மாற்றுவது மட்டுமின்றி, திரையில் உள்ள உள்ளடக்கத்தைத் திருத்துவது, படங்களை உருவாக்குவது போன்ற பிற பணிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். Gemini ஆப்ஸ் அமைப்புகளில் உள்ள பேச்சுவழி உள்ளீடு பிரிவின் கீழ் ரீசனிங் அம்சத்தை ஆன் செய்யுங்கள். இது இயக்கப்பட்டதும், சொல்வதை எழுதும் வசதி மற்றும் ரீசனிங் பணிகளுக்கு இடையிலான வேறுபாட்டை Gemini புத்திசாலித்தனமாகப் புரிந்துகொள்ளும்.
உதவிக்குறிப்புகள்:
-
நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தால், கைகளைப் பயன்படுத்தாமல் ரெக்கார்டு செய்ய FN பட்டனை இருமுறை தட்டுங்கள். முடிப்பதற்கு அதை மீண்டும் ஒருமுறை தட்ட வேண்டும். ப்ராம்ப்ட் பெட்டியில் உள்ள பேச்சுவழி உள்ளீடு ஐகானைக் கிளிக் செய்வதன் மூலமும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
-
ரீசனிங் அம்சத்தை ஆன்/ஆஃப் செய்ய அல்லது உங்கள் ஷார்ட்கட் கீகளைப் பிரத்தியேகமாக்க அமைப்புகள் > பேச்சுவழி உள்ளீடு என்பதற்குச் செல்லுங்கள்.
-
வார்த்தைகள் அல்லது படம் குறித்த குறிப்பிட்ட சூழலை Geminiக்கு வழங்க, அதை ஹைலைட் செய்து FN பட்டனை அழுத்திப் பிடித்துப் பேசத் தொடங்குங்கள். பேச்சுவழி உள்ளீடு அம்சத்தைத் தொடங்கியதும், ஹைலைட் செய்த தகவலைத் தேர்வுநீக்கி விடுங்கள். அப்போதுதான் Gemini அந்தத் தகவலை மாற்றாது.
Gemini macOS ஆப்ஸின் எல்லாப் பயனர்களுக்கும் முதற்கட்டமாக ஆங்கிலத்தில் இந்த அம்சம் வெளியிடப்படுகிறது.
Gemini macOS ஆப்ஸ் Mac ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கே உரிய நேட்டிவ் ஆப்ஸ் என்பதால், இது உங்கள் சாதனத்தில் உள்ள ஃபைல்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும். மேலும், Macகில் AI பயன்படுத்துவதற்கான மிகச்சிறந்த தடையற்ற அனுபவத்தையும் இது வழங்குகிறது. உங்கள் தனியுரிமையை உறுதிசெய்ய, நீங்கள் வெளிப்படையாக இணைக்கும் குறிப்பிட்ட டைரக்டரிகளை மட்டுமே Gemini Spark அணுகும். கடினமான பணிகளைச் செய்ய Gemini Sparkகை அனுமதிக்கும் அதேவேளையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. உங்கள் வழிகாட்டுதலின்படி, Mac ஆட்டோமேஷனுக்கு முன்னுரிமை அளிப்பது, இணைக்கப்பட்ட ஃபோல்டர்களில் உள்ள ஃபைல்களை ஒழுங்கமைத்து பெயர் மாற்றுவது, சிதறிக்கிடக்கும் தகவல்களைத் திரட்டி Google Docs மற்றும் Sheetsஸில் உள்ள உள்ளடக்கத்தைப் புதுப்பித்துச் சுருக்க விவரமாக வழங்குவது போன்ற பணிகளை Gemini Spark மேற்கொள்ளும்.
Check availability here.
ஆம்! ஒரே Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கும் வரை, உங்கள் உரையாடல் பதிவுகளும் நினைவுப் பதிவும் எல்லாச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும்.
விரிவான சிஸ்டம் தேவைகள், நிறுவல் வழிகாட்டிகள், உபயோக உதவிக்குறிப்புகள் ஆகியவற்றுக்கு உதவி மையத்தைப் பாருங்கள்.
பதில்களைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அமைவு தேவை. இணக்கத்தன்மையும் கிடைக்கும் நிலையும் மாறுபடும். 18 வயது நிரம்பிய பயனர்களுக்கு Google AI சந்தா மூலம் குறிப்பிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.