டெஸ்க்டாப்பிற்கான Geminiயைப் பதிவிறக்குங்கள்.
உங்கள் பணி நடக்கும் இடத்திலேயே உதவி பெறுங்கள்.
ஆவணங்களை உருவாக்குவது முதல் கிரியேட்டிவான யோசனைகளைக் கண்டறிவது வரை அனைத்திற்கும் Geminiயை எளிதாக அணுகலாம். நீங்கள் இருக்கும் இடத்திலேயே உதவத் தயாராக இருப்பதால் உங்கள் பணி தடைபடாது.
Gemini ஆற்றலுடன் இயங்கும் உங்கள் டெஸ்க்டாப்.
டெஸ்க்டாப்பில் நீங்கள் பணிபுரியும் விதத்திற்கு ஏற்றவாறு இது உருவாக்கப்பட்டுள்ளது. Windows மற்றும் macOS முழுவதும், அன்றாடப் புராஜெக்ட்டுகளைச் செய்ய Gemini உங்களுக்கு எப்படி உதவுகிறது என்று பாருங்கள்.
பதில்களுக்கான ஒரே ஷார்ட்கட்.
நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணிக்கு மேலேயே Geminiயை வரவழைக்க, Windowsல் Alt + Space அல்லது Macகில் Option + Space அழுத்தலாம். கேள்விகளைக் கேட்கலாம், தகவல்களைச் சரிபார்க்கலாம், வரைவுகளை உருவாக்கலாம், பிறகு உங்கள் வேலையை அப்படியே தொடரலாம்.
உங்கள் கடினமான வேலைகளும் இனி சுலபமாக முடியும்.
ஆராய்ச்சி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல் போன்ற பல நிலைகளைக் கொண்ட பணிகளை உங்கள் 24/7 தனிப்பட்ட AI ஏஜெண்ட்டான Gemini Sparkகிடம் ஒப்படையுங்கள். இது தன்னிச்சையாகச் செயல்படும், ஆனால் எப்போதும் உங்கள் வழிகாட்டுதலின் படியே இயங்கும்.
தினசரி பயன்படுத்தும் Google ஆப்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Gmail, Google Drive, Docs, Calendar ஆகியவற்றில் உள்ள தகவல்களை உங்கள் டெஸ்க்டாப் பணிமுறைக்கே நேரடியாகக் கொண்டு வரலாம். ஈமெயில் மெசேஜ் தொடர்களில் உள்ள விவரங்களைக் கண்டறியவோ, பகிரப்பட்ட ஆவணங்களின் சுருக்க விவரத்தை வழங்கவோ, மீட்டிங் குறிப்புகளைச் சரிபார்க்கவோ Geminiயைக் கேட்கலாம்.
உங்கள் டெஸ்க்டாப்பிற்கேற்ற கிரியேட்டிவிட்டி.
பிரத்தியேகமான டெஸ்க்டாப் பணிச்சூழலில் கிரியேட்டிவ் கருத்துகளுக்கு உயிரூட்டுங்கள். யோசனைகள் தோன்றும்போதெல்லாம் Nano Banana மூலம் பிரத்தியேகப் படங்களை உருவாக்கலாம், Gemini Omni மூலம் உயர்தர வீடியோக்களை நேரடியாக உருவாக்கலாம்.
வேலைப்பளு மிகுந்த நாட்களை எளிதாக்க உதவும் உதவிக்குறிப்புகள்.
டெஸ்க்டாப்பில் உங்கள் பணிகளைச் செய்து முடிக்கப் புதிய வழிகளைக் கண்டறியுங்கள். macOSல் இப்போது கிடைக்கும் கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். விரைவில் Windowsக்கும் இவை கிடைக்கவுள்ளன.
பாருங்கள். தீர்வு காணுங்கள்.
உங்கள் திரையில் உள்ளவற்றைப் பகிருங்கள். பிழைகளைத் திருத்தவும், விளக்கப்படங்களைப் புரிந்துகொள்ளவும், நீங்கள் செய்யும் எந்தவொரு வேலையை எளிதாக்கவும் அந்தந்தச் சூழலைப் பயன்படுத்தி Gemini உங்களுக்கு உதவும்.
டெஸ்க்டாப்பை ஒழுங்கமையுங்கள்.
உங்கள் ஃபோல்டர்களை ஒழுங்கமைக்க அல்லது சாதனத்தில் உள்ள ஃபைல்களின் சுருக்க விவரத்தை Google Docs மற்றும் Sheetsல் பெற, Gemini Spark பயன்படுத்தலாம்.
மனதில் உள்ளதை அப்படியே பேசுங்கள்.
எந்த ஆப்ஸிலும் உங்கள் எண்ணங்களைக் கூறலாம், Gemini நீங்கள் சொல்வதை நிகழ்நேரத்திலேயே வடிவமைத்து மேம்படுத்தும்.
பொதுவான கேள்விகள்
Gemini ஆப்ஸ் ஆதரிக்கப்படும் எல்லா மொழிகளிலும் நாடுகளிலும் Gemini டெஸ்க்டாப் ஆப்ஸ் கிடைக்கிறது.
-
Windows: Windows 10 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் (x64 மற்றும் ARM64) இயங்கும்.
-
macOS: Apple Silicon MacBooksல் இயங்கும். மேலும் இதற்கு macOS Sequoia (15.0) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை.
அம்சத்தின் கிடைக்கும்நிலை மாறுபடும்.
டெஸ்க்டாப்பில் Geminiயை அணுக பல விரைவான வழிகள் உள்ளன:
Windows:
-
பிரத்தியேகமாக்கக்கூடிய ஷார்ட்கட்: எங்கிருந்தும் Geminiயை உடனடியாக அழைக்க Alt + Space பட்டன்களை அழுத்தலாம்.
-
செயல் பட்டி & சிஸ்டம் டிரே: Windows செயல் பட்டியில் இருந்து ஆப்ஸைத் தொடங்கலாம் அல்லது உங்கள் சிஸ்டம் டிரேயில் உள்ள Gemini ஐகானைக் கிளிக் செய்யலாம்.
macOS:
-
பிரத்தியேகமாக்கக்கூடிய ஷார்ட்கட்கள்: மினி உரையாடலைத் திறக்க Option + Space அழுத்தலாம் அல்லது முழு உரையாடல் அனுபவத்திற்கு Option + Shift + Space அழுத்தலாம்.
-
மெனு பட்டி & Dock: உங்கள் திரையின் மேற்பகுதியில் உள்ள மெனு பட்டியில் இருக்கும் Gemini ஐகானைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது Mac Dockகில் உள்ள அதன் ஐகானைக் கிளிக் செய்யலாம்.
உதவிக்குறிப்பு: Gemini ஆப்ஸ் அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஷார்ட்கட் பட்டன்களை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம்.
Gemini macOS ஆப்ஸில், Command பட்டன்கள் இரண்டையும் அழுத்தி உங்கள் திரை சூழலைப் பகிர்வதன் மூலம் பிரத்தியேகமான பதில்களைப் பெறலாம், உங்கள் குரலைப் பயன்படுத்தி தெளிவான வார்த்தைகளைப் பேசி டைப் செய்யலாம், திறந்திருக்கும் ஆப்ஸில் உள்ள உள்ளடக்கத்தைத் திருத்தலாம், மேலும் உங்கள் ஃபைல்களை ஒழுங்கமைக்கவும் ஒருங்கிணைக்கவும் சாதனத்தில் உள்ள ஃபோல்டர்களை Gemini Spark உடன் இணைக்கலாம்.
காலப்போக்கில் Windowsல் கூடுதல் உள்ளமைந்த திறன்கள் வெளியிடப்படும்.
ஆம்! ஒரே Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கும் வரை, உங்கள் உரையாடல் பதிவுகளும் நினைவுப் பதிவும் எல்லாச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும்.
பதில்களைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அமைவு தேவை. இணக்கத்தன்மையும் கிடைக்கும் நிலையும் மாறுபடும். 18 வயது நிரம்பிய பயனர்களுக்கு Google AI சந்தா மூலம் குறிப்பிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.