Gemini Live இந்த உரையாடலில் இணைந்துள்ளது.
Gemini Live இப்போது உங்கள் உரையாடலிலேயே உள்ளமைக்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் பேசுவதற்கும் டைப் செய்வதற்கும் இடையே எந்தத் தடையுமின்றி மாறலாம்.
டைப் செய்வதைத் தாண்டியும் பேசலாம்.
நீங்கள் ஒரு மோடிலிருந்து மற்றொரு மோடிற்கு மாறும்போது, கடினமான பணிகளை உங்களுக்காகச் செய்து முடிக்க உங்களுக்குப் பிடித்த ஆப்ஸுடன் Gemini நேரடியாக இணைகிறது. விரைவில், நாங்கள் வட்டார வழக்குகளை வழங்குவோம். இதனால், உங்கள் வட்டார வழக்கில் உள்ள குரலை நீங்கள் தேர்வுசெய்ய முடியும்.
காட்சிகளுடன் கூடிய விளக்கம்.
நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, உங்களுக்குத் தேவைப்படும் சரியான நேரத்தில் வரைபடங்கள், வானிலைக் கார்டுகள், படங்கள் போன்ற காட்சித் தகவல்களை Gemini Live நிகழ்நேரத்தில் வழங்கும்.
உங்கள் உலகம், இணைப்பில்.
உங்களுக்குப் பிடித்தமான ஆப்ஸையும் கருவிகளையும் சிறு கேள்வியின் மூலம் எளிதாக இணைத்திடுங்கள். ஈமெயில்களைப் பார்க்கலாம், விமான விவரங்களைக் கண்டறியலாம், நேரத்தை ஒதுக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிக்க இதுவே எளிய வழி.
கேமராவுடன் Nano Banana.
நீங்கள் பார்ப்பதை Gemini-க்குக் காட்டி, Nano Banana மூலம் புதிய படைப்பாற்றல்மிக்க சூழல்களைக் கற்பனை செய்ய "இதை ரீ-இமேஜின் செய்" என்று சொல்லிப் பாருங்கள்.
பொதுவான கேள்விகள்
Gemini Live என்பது உங்கள் குரலை மட்டுமே பயன்படுத்தி Googleளின் AIயுடன் உரையாட உதவும் அம்சமாகும். ப்ராம்ப்ட்டுகளை டைப் செய்வதற்குப் பதிலாக, Gemini ஆப்ஸில் நேரடியாகவே இயல்பான முறையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போல் AI குரல் உரையாடலை மேற்கொள்ளலாம். உரையாடலைத் தொடங்க Live ஐகானைத் தட்டினால் போதும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உரையாடலுக்கு இடையே குறுக்கிடலாம் அல்லது தலைப்பை மாற்றலாம். இந்த உரையாடல் AI அசிஸ்டண்ட்டானது உங்கள் உரையாடலுக்கு ஏற்ப உடனடியாகச் செயல்படும்.
ஆம். இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Geminiயுடனான உரையாடலில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம், பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உங்கள் குரலைப் பயன்படுத்தி AI உடனான Live உரையாடலுக்கு எளிதாக மாறிக்கொள்ளலாம். உங்கள் சூழல், கருவிகள் மற்றும் உரையாடல் பதிவுகள் என அனைத்தும் ஒரே மெசேஜ் தொடரில் அப்படியே இருக்கும்.
ஆம். Gemini Live என்பது உங்களுக்கான தனிப்பட்ட உரையாடல் AI அசிஸ்டண்ட்டாகும். அதாவது, காலப்போக்கில் உங்களை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் AIயிடம் ஏதேனும் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, வெவ்வேறு உரையாடல் அமர்வுகளில் நீங்கள் குறிப்பிடும் முக்கிய விவரங்களை (உங்கள் உணவுப்பழக்கங்கள், குடும்பத்தின் முக்கியமான தேதிகள், உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் போன்றவை) அது பாதுகாப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும். இதனால், அடுத்தடுத்த உரையாடல்களின்போது நீங்கள் அவற்றை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது.
உரையாடலின்போது, Gemini உங்கள் Google சேவைகளுடன் தடையின்றி இணைந்து செயல்படுவதால், நீங்கள் கைகளைப் பயன்படுத்தாமலேயே பணிகளைச் சுலபமாகச் செய்து முடிக்கலாம். உங்கள் உரையாடல் AI அசிஸ்டண்ட்டுடன் நீங்கள் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு கருவிகளிலிருந்து தகவல்களைப் பெறவோ பணிகளைச் செய்யவோ Geminiயிடம் கேட்கலாம். உதாரணமாக, உங்கள் ஈமெயில்களில் இருக்கும் குறிப்பிட்ட விவரங்களைக் கண்டறிய Gmail மற்றும் Google Driveவில் Gemini தேடலாம் அல்லது உங்கள் ஆவணங்களின் சுருக்கத்தை விரைவாக வழங்கலாம். உங்கள் Google Calendarரைப் பார்த்து உங்கள் திட்ட அட்டவணையையும் சரிபார்ப்புப் பட்டியலையும் நிர்வகிப்பதோடு, செய்ய வேண்டிய புதிய பணிகளை நேரடியாக Google Tasks அல்லது Keep Notes-ஸில் சேர்க்கவும் இது உதவும். நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, Google Mapsஸில் வழிகளைக் கண்டறியும்படியும், விமானம் மற்றும் ஹோட்டல் விவரங்களைத் தேடும்படியும், YouTubeல் பயனுள்ள விளக்க வீடியோக்களைப் பிளே செய்யும்படியும், உங்கள் ஸ்மார்ட் வீட்டுச் சாதனங்களையும் ஃபோன் அமைப்புகளையும் கட்டுப்படுத்தும்படியும் உங்கள் AI வாய்ஸ் அசிஸ்டண்ட்டிடம் சொல்லலாம்.
AI உடனான உங்கள் Live உரையாடலை வேகமாகவும் இயல்பாகவும் வைத்திருக்க, குரல் மூலம் உரையாடும்போது சில உருவாக்குதல் மற்றும் ஒழுங்கமைத்தல் அம்சங்கள் கிடைக்காது. Gemகளையோ நோட்புக்குகளையோ Gemini Live அணுக முடியாது. மேலும், Gemini Liveவில் Omni அல்லது Lyria மாடலைப் பயன்படுத்த முடியாது. இந்தக் குறிப்பிட்ட அம்சங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், குரல் உரையாடலுக்கான திரையை மூடிவிட்டு, வழக்கமான டைப்பிங் சாளரத்திற்குத் திரும்பினால் போதும்.
பதில்களைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணக்கத்தன்மை, கிடைக்கும் நிலை, வயதுக் கட்டுப்பாடுகள் ஆகியவை மாறுபடும். சில அம்சங்களுக்கு அமைவு அல்லது சந்தா தேவை.