உங்கள் பதிவுகளை Geminiக்கு நகர்த்துங்கள்
புதிதாகத் தொடங்குவதைப் போல் உணராமல் Geminiயைப் பயன்படுத்தத் தயாரா? உங்கள் AI உரையாடல்களையும் நினைவுப் பதிவுகளையும் இங்கே நகர்த்துங்கள்.
ஒருசில கிளிக்குகளில் உங்கள் நினைவுப் பதிவுகளைப் பெறுங்கள்
மற்றொரு AI ஆப்ஸில் இருந்து உங்கள் நினைவுப் பதிவுகளை நகர்த்துவது மிகவும் எளிது. அதை Gemini உங்களுக்கு விளக்கும்.
உங்கள் விருப்பத்தேர்வுகளைச் சேமியுங்கள்
உங்கள் பிரத்தியேக வழிமுறைகளை உங்களுடன் கொண்டுவரலாம். உங்கள் விருப்பத்தேர்வுகளை Geminiயின் நினைவுப் பதிவு அமைப்புகளில் ஒட்டினால் போதும்.
உரையாடல் பதிவுகளை நகர்த்துங்கள்
வேறொரு AI ஆப்ஸில் இருந்து உங்கள் தரவை எக்ஸ்போர்ட் செய்து .ZIP ஃபைலை Geminiயில் பதிவேற்றலாம். உங்கள் முந்தைய உரையாடல் தொடர்களை Gemini பாதுகாப்பாக ஒழுங்கமைக்கும் என்பதால் அவற்றை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
அது எளிமையானது. உங்கள் AI பதிவுகளை இங்கே கொண்டுவாருங்கள்.
உரையாடலின் மிக முக்கியமான பகுதிகளை நகர்த்துவதற்காகவும், நீங்கள் விட்ட இடத்திலிருந்து உரையாடலைத் தொடர்வதற்காகவும் இந்தச் செயல்முறையை எளிதாக்கியுள்ளோம்.
தற்போது நீங்கள் பயன்படுத்தும் AIயிடம் கேளுங்கள்
உங்கள் விருப்பத்தேர்வுகள் மற்றும் ஸ்டைலின் சுருக்க விவரத்தை உருவாக்க, நாங்கள் பரிந்துரைக்கும் ப்ராம்ப்ட்டை நகலெடுத்து அதை உங்கள் மற்றொரு AI ஆப்ஸில் ஒட்டுங்கள்.
பதிலை நகலெடுங்கள்
உங்களுக்காக அது உருவாக்கும் பிரத்தியேகச் சுருக்க விவரத்தை நகலெடுங்கள்.
Geminiயில் ஒட்டுங்கள்
Geminiயில் இம்போர்ட் அமைப்புகளுக்குச் சென்று அந்த பதிலை ஒட்டுங்கள். நீங்கள் வேலை செய்யும் விதத்தை ஏற்கெனவே புரிந்துவைத்துள்ள AI உடன் உரையாடத் தொடங்குங்கள்.
உங்கள் தரவை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்
தற்போது நீங்கள் பயன்படுத்தும் AI சேவையின் வழங்குநரிடம் தரவை எக்ஸ்போர்ட் செய்யும்படி கேளுங்கள் (வழக்கமாக அவர்கள் ஜிப் ஃபைலை உங்களுக்கு ஈமெயிலில் அனுப்புவார்கள்).
Geminiக்குப் பதிவேற்றுதல்
Gemini அமைப்புகளில் உள்ள "உரையாடல் பதிவுகள் இம்போர்ட்" பிரிவிற்குச் சென்று உங்கள் ஜிப் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்
உங்கள் முந்தைய மெசேஜ் தொடர்களைப் பாதுகாப்பாகச் செயலாக்கி ஒழுங்கமைத்து, அவற்றைத் தேடவும், மேற்கோள் காட்டவும், தொடர்ந்து உரையாடவும் Gemini உதவுகிறது.
ஆமாம்… மாற்றுவதற்குக் கட்டணம் இல்லை
Geminiயில் இருந்து மேலும் பலவற்றைப் பெறும்போது, நீங்கள் எதைத் தவற விடுகிறீர்கள் என்பதைக் கண்டறியுங்கள்.
பொதுவான கேள்விகள்
AI உரையாடல் பதிவுகளை இம்போர்ட் செய்ய, உங்கள் தற்போதைய AI சேவை வழங்குநரிடம் இருந்து உங்கள் தரவை முதலில் எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும். உங்கள் தரவை எக்ஸ்போர்ட் செய்ய, வழக்கமாக உங்கள் பிற ஆப்ஸின் அமைப்புகளில் "தரவுக் கட்டுப்பாடுகள்" அல்லது "தனியுரிமை" என்பதன் கீழ் இந்த விருப்பத்தைப் பார்க்கலாம். உங்கள் ஃபைலைப் பதிவிறக்கியதும், உங்கள் AI பதிவுகளை உங்களுடன் கொண்டுவர அதை நேரடியாக Geminiயில் பதிவேற்றலாம்.
தற்போது, உங்கள் உரையாடல் பதிவுகளை இம்போர்ட் செய்ய அதிகபட்சம் 5 GB அளவுள்ள .zip ஃபைல்களை ஆதரிக்கிறோம்.
இல்லை, புராஜெக்ட் ஃபைல்களை இம்போர்ட் செய்ய முடியாது. ஆனால் .zip ஃபைலைப் பதிவேற்றுவதன் மூலம் பிற AI சேவை வழங்குநர்களிடமிருந்து உங்கள் முழு உரையாடல் பதிவுகளையும் இம்போர்ட் செய்ய எங்கள் கருவி உங்களை அனுமதிக்கிறது. அதன் பிறகு, எந்தவொரு ஃபைலையும் நேரடியாக Geminiயில் பதிவேற்றலாம்.
AI உரையாடல் பதிவுகளை இம்போர்ட் செய்யும்போது, உங்கள் உரையாடல்களில் உள்ள வார்த்தைகள் Geminiக்கு மாற்றப்படும். உங்கள் முந்தைய ஆப்ஸில் உருவாக்கப்பட்ட படங்களும் ஃபைல்களும் அதில் சேர்க்கப்படாது.
இம்போர்ட் செய்ததும், உங்கள் AI உரையாடல்கள் இடது பக்க மெனுவில் “உரையாடல்கள்” என்பதற்குக் கீழ், இம்போர்ட் செய்யப்பட்ட உரையாடல்களுக்கான சிறப்பு ஐகானுடன் காட்டப்படும்.
ஒரேயொரு உரையாடலை நீக்க: உங்கள் மெனுவில் உரையாடலைக் கண்டறிந்து, மூன்று புள்ளி ஐகானைக் கிளிக் செய்து நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முழுத் தொகுப்பையும் நீக்க: உங்கள் அமைப்புகளில், குறிப்பிட்ட இம்போர்ட்டுக்கு அடுத்துள்ள ‘நீக்கியவை’ ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம், குறிப்பிட்ட .zip ஃபைலில் உள்ள எல்லா AI உரையாடல்களையும் நீக்கலாம்.
இணக்கத்தன்மையும் கிடைக்கும் நிலையும் மாறுபடும். 18 வயது நிரம்பிய பயனர்களுக்குக் கிடைக்கிறது. Geminiயில் பிரத்தியேகமாக்கம் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.