தனிப்பட்ட நுண்ணறிவு
உங்களுக்கான பிரத்தியேக உதவி
சுற்றுலா யோசனைகள் முதல் புராஜெக்ட் திட்டங்கள் வரை எல்லாவற்றுக்கும் மிகவும் தனிப்பட்ட உதவியைப் பெறுங்கள். Gmail, Photos, Search, YouTube போன்ற உங்கள் Google ஆப்ஸில் உள்ள தகவல்களையும் உரையாடல் பதிவுகளுக்கான உங்கள் விருப்பத்தேர்வுகளையும் ஒருங்கிணைத்து, உங்களுக்கு ஏற்ற பிரத்தியேகப் பரிந்துரைகளை Gemini வழங்குகிறது.
உங்களைப் புரிந்துகொண்டு உரையாடும்
உங்களுக்கான பிரத்தியேக உதவி இதோ
Gmail, Photos, Search, YouTube போன்ற உங்கள் Google ஆப்ஸில் உள்ள தகவல்களை ஒருங்கிணைத்து Gemini உங்களுக்குப் பிரத்தியேகமாக உதவ முடியும். முழுக் கட்டுப்பாடும் உங்களிடமே உள்ளது. எந்த ஆப்ஸை இணைக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம், உங்கள் பிரத்தியேகமாக்க அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம்.
தகுதிபெறும் பயனர்களுக்கு இப்போது கிடைக்கிறது.
உங்கள் விருப்பங்களைத் துல்லியமாக்குங்கள்
ஏதேனும் பெரிதாகப் பர்ச்சேஸ் செய்யும்போது தெளிவான யோசனை இல்லையா? Gemini வெவ்வேறு தயாரிப்புகளை ஆராய்ந்து உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளைப் பரிந்துரைக்கும்.
உங்கள் விருப்பத்தேர்வுகளைப் பகிர்ந்து மிகவும் துல்லியமான பரிந்துரைகளைப் பெறுங்கள்
மிகவும் உதவிகரமான, தொடர்புடைய பதில்களைப் பெற பணி, பொழுதுபோக்குகள், வாழ்க்கைக் குறிக்கோள்கள் உள்ளிட்டவை குறித்த உங்கள் ஆர்வங்களையும் விருப்பத்தேர்வுகளையும் நினைவில் வைத்துக்கொள்ளும்படி Geminiயிடம் சொல்லலாம்.
பிடித்தமான புதிய விஷயங்களைக் கண்டறியுங்கள்
நீங்கள் வாசித்தவை, உங்களுக்குப் பிடித்தவை ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் தவறாமல் படிக்கக்கூடிய புத்தகத்தைப் பரிந்துரைக்கும்படி Geminiயைக் கேட்கலாம்.
ஒவ்வொரு முறையும் தடையில்லா உரையாடல்கள்
பதில்களை வழங்க உங்களின் முந்தைய உரையாடல்களைப் பயன்படுத்தும்படி Geminiயிடம் சொல்லலாம். நீங்கள் விட்ட இடத்திலிருந்து எளிதாகத் தொடரலாம் அல்லது முந்தைய உரையாடலின் சுருக்கத்தை வழங்கும்படி கேட்கலாம். Gemini உடனான உங்கள் உரையாடல்களைப் பார்க்கலாம் நீக்கலாம்.
அதிகம் பிரபலமடையாத சிறந்த இடங்களைக் கண்டறியுங்கள்
உங்களுக்கேற்ற பயணத் திட்டத்தை உருவாக்குங்கள். உங்களின் ரசனைகள், முந்தைய தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இடங்களை Gemini பரிந்துரைக்கிறது. உள்ளூர் உணவகங்கள் முதல் அருகிலுள்ள புதிய இடங்கள் வரை உங்களுக்குப் பிடித்த புதிய இடங்களைக் கண்டறிய இது உதவுகிறது.
உங்கள் தனியுரிமை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது
நாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு உறுதியளிப்பதோடு முழுக் கட்டுப்பாட்டையும் உங்களிடமே வழங்குகிறோம்.
உங்கள் விருப்பப்படி ஒப்புதல் அளிக்கலாம் நீக்கலாம்
தனிப்பட்ட நுண்ணறிவு அனுபவங்கள் விருப்பத்திற்குரியவை. எந்தெந்த Google ஆப்ஸை இணைக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம், உங்கள் முந்தைய உரையாடல்கள் பயன்படுத்தப்படும் விதத்தை நிர்வகிக்கலாம், வழிமுறைகளை நீங்களே அமைக்கலாம்.
தரவு நிர்வகிக்கப்படுகிறது
உங்கள் Google செயல்பாடுகளைப் பார்க்கலாம், Gemini அமைப்புகளில் தனிப்பட்ட நுண்ணறிவை அணுகலாம், உங்கள் முந்தைய Gemini உரையாடல் பதிவுகளைப் பார்க்கலாம்.
வெளிப்படைத்தன்மையே எங்கள் முன்னுரிமை
நீங்கள் சரிபார்த்துக்கொள்வதற்காக, இணைக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து பயன்படுத்திய தகவல்களை Gemini குறிப்பிடும் அல்லது விளக்கும். குறிப்பிடவில்லை என்றால், நீங்கள் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம்.
பொதுவான கேள்விகள்
தனிப்பட்ட நுண்ணறிவு மூலம், ப்ராம்ப்ட்டுடன் சேர்த்து உங்கள் சூழலையும் பகுப்பாய்வு செய்து மிகவும் தொடர்புடைய, பிரத்தியேகமான பதில்களை Gemini வழங்குகிறது. பதிலை வழங்க உங்கள் பிரத்தியேக வழிமுறைகள், முந்தைய உரையாடல்கள் அல்லது இணைக்கப்பட்ட உங்கள் Google ஆப்ஸில் உள்ள தகவல்கள் உதவியாக இருக்குமா என்பதை இது தீர்மானிக்கிறது. நீங்கள் பெறும் தகவல்கள் உங்கள் குறிப்பிட்ட ஆர்வங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பிரத்தியேகமாக்கப்படுவதை இந்தக் கூடுதல் சூழல் உறுதிசெய்கிறது.
தனிப்பட்ட நுண்ணறிவு தற்போது உலகளவில் தகுதிபெறும் பயனர்களுக்கு ஒரு பீட்டா பதிப்பாக வெளியிடப்பட்டு வருகிறது. தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி, சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள்/பிராந்தியங்களைத் தவிர.
தேவைகள்: நீங்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த பீட்டா அம்சம் தனிப்பட்ட Google கணக்குகளுக்குக் கிடைக்கிறது, Workspace Business, Enterprise மற்றும் Education பயனர்களுக்குக் கிடைக்காது.
பிளாட்ஃபார்ம்கள்: ஆன் செய்ததும், இணையம், Android, iOS ஆகியவற்றில் இது செயல்படும்.
மாடல்கள்: Gemini மாடல் தேர்வியில் தற்போது கிடைக்கும் எல்லா மாடல்களிலும் இது வேலை செய்யும்.
தனிப்பட்ட நுண்ணறிவுடன் தற்போது Gmail, Photos, Search, YouTube போன்ற Google ஆப்ஸை இணைக்கலாம். வரவிருக்கும் மாதங்களில், உங்களின் மேலும் பல Google ஆப்ஸ் மற்றும் சேவைகளில் இருந்தும் சூழலை உங்கள் அனுமதியுடன் Gemini பயன்படுத்த முடியும்.
வரிசைகள் சுருக்கப்பட்டுள்ளன. பதில்களைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அமைவு தேவை. இணக்கத்தன்மையும் கிடைக்கும்நிலையும் மாறுபடும். 18 வயது நிரம்பியவர்களுக்குக் கிடைக்கிறது.