உங்கள் மொபைலில் AI ட்ரிப் பிளானரைப் பயன்படுத்துங்கள்
பயணம் வேண்டும், ஆனால் இணையப் பக்கங்கள் வேண்டாம். Gemini மூலம் உங்கள் அடுத்த விடுமுறைத் திட்டத்தை எளிமையாக்குங்கள். உங்களுக்கு மிகப் பிரத்தியேகமான, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற விமானங்கள், ஹோட்டல்கள், சிறந்த உணவகங்கள் ஆகியவற்றை Gemini கண்டறியும்.
உங்கள் விருப்பத்தை விவரியுங்கள், உங்களுக்கான விமானங்களைக் கண்டறிகிறோம்
உங்களுக்கு அருகிலுள்ள குறைந்த கட்டண விமானங்களையும் பட்ஜெட்டிற்கேற்ற ஹோட்டல்களையும் கண்டறியக்கூடிய உங்கள் தனிப்பட்ட பயண ஆப்ஸாக Geminiயைப் பயன்படுத்துவதன் மூலம், வழக்கமான முன்பதிவுத் தளங்களில் உள்ள எண்ணற்ற ஃபில்டர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம். பத்து இருபது பக்கங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, "நடக்கின்ற தூரத்தில் உள்ள, 200 டாலருக்குக் குறைவான, அதிக ரேட்டிங் பெற்ற பொட்டிக் ஹோட்டல்" போன்ற உங்கள் விருப்பமான விடுமுறையை விவரியுங்கள். உங்கள் விருப்பத்திற்குப் பொருத்தமான Google Flights மற்றும் Hotelsஸில் உள்ள நிகழ்நேர விருப்பங்களை Gemini விரைவாகக் காட்டும். மேம்பட்ட, விமானக் கட்டணங்களை ஒப்பிடும் கருவியாகவும் ட்ரிப் பிளானிங் உதவியாளராகவும் செயல்படுவதன் மூலம், உங்கள் ட்ரிப் பிளான்கள் சீராக ஒழுங்கமைக்கப்படுவதையும் உங்கள் பட்ஜெட் மீறப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய உதவுகிறது.
யோசனையில் தொடங்கி பயணத் திட்டம் வரை
பயணம் செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் எங்கே தொடங்குவது என்று தெரியவில்லையா? ஜாலியாக நியூயார்க் செல்வதா அல்லது மனம் புத்துணர்ச்சி பெறுவதற்காக புதிய இடங்களுக்குச் செல்லவா என்று நீங்கள் குழப்பத்தில் இருந்தால், சாத்தியமான பயண இடங்களையும் நீங்கள் செல்வதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவற்றையும் கண்டறிய உங்கள் நிகழ்நேர விடுமுறைத் திட்டமிடல் கருவியாக Gemini பயன்படுத்துங்கள். டோக்கியோவில் உள்ள ஒரு பிரபலமான ரெக்கார்டு ஸ்டோரைப் பார்ப்பதாகக் கற்பனை செய்யுங்கள், அது உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள மற்ற இடங்களுக்கு அருகில் உள்ளதா என்று யோசியுங்கள். அதை நீங்களே திட்டமிடுவதற்குப் பதிலாக, Geminiயிடம் இப்படிச் சொல்லுங்கள்: "இந்த ரெக்கார்டு ஸ்டோர், விண்டேஜ் த்ரிஃப்டிங், எனக்கு அருகிலுள்ள சிறந்த உள்ளூர் உணவு ஆகியவற்றை 4 நாள் டோக்கியோ பயணத்தில் அனுபவிக்க விரும்புகிறேன்." வழக்கமான பயணத் திட்டமிடல் குறித்த தலைவலி இல்லாமல், “ஒருவேளை” என்பதை உறுதியான திட்டமாக மாற்றும் வகையில், அருகிலுள்ள இடங்களின் அடிப்படையில் செய்ய வேண்டியவற்றைத் தொகுத்து விரைவாக ஒரு பிரத்தியேக வழியை இது உருவாக்குகிறது.
உள்ளூர்வாசியைப் போல் உலாவுங்கள்
உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் நாகரிகத்தைப் புரிந்துகொள்ளவும், பிரபலமடையாத சிறந்த இடங்களைக் கண்டறியவும் நிகழ்நேரப் பயண வழிகாட்டியாக Geminiயைப் பயன்படுத்தி எப்போதும் முன்னேற்பாட்டுடன் இருங்கள். திடீர் மழை காரணமாக உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தாலோ உங்களுக்குப் பிடித்த இடம் அன்றைய தினம் மூடப்பட்டிருந்தாலோ, Google Mapsஸில் அதுபோன்ற தற்காலிக இடத்தைக் கண்டறியும்படி Geminiயிடம் கேட்கலாம். Gemini Live மூலம், நீங்கள் செல்லும் வழியில் உள்ள தகவல் பலகைகளையோ மெனுக்களையோ மொழியாக்கம் செய்ய உங்கள் கேமராவைப் பகிரலாம் அல்லது உங்கள் சுற்றுப்புறத்தின் வரலாற்றைக் கண்டறிய உங்கள் லென்ஸை ஒரு நினைவுச்சின்னத்தின் மீது காட்டலாம். உங்கள் Google ஆப்ஸை ஒத்திசைப்பதன் மூலம், உங்கள் பயணத் திட்டத்தை நிகழ்நேரத்தில் நிர்வகிக்க Gemini உதவுகிறது. மேலும், மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த தலைசிறந்த படைப்பையோ அதிசயமான காட்டுப்பூவையோ நீங்கள் பார்க்கும்போது, ஒவ்வொரு திருப்பத்தையும் சிறப்பானதாக மாற்றத் தயாராக ஒரு நிபுணர் உங்களுடன் இருப்பதை உறுதிசெய்கிறது.
பொதுவான கேள்விகள்
ஆம்! Google Flights உடன் இணைப்பதன் மூலம், விமானங்களைக் கண்டறியும் உங்கள் தனிப்பட்ட கருவியாக Gemini செயல்படும். குறைந்த கட்டண விமான டிக்கெட்டுகளைத் தேடும்படியோ உங்கள் அடுத்த விடுமுறைப் பயணத்திற்கான மிகக் குறைந்த விமானக் கட்டணத்தை ஒப்பிடும்படியோ கேட்கலாம்.
எளிமையாக Geminiயிடம் "எனக்கு அருகிலுள்ள குறைந்த கட்டண ஹோட்டல்கள் எவை?" அல்லது "எனக்கு அருகிலுள்ள சிறந்த ஹோட்டலைக் கண்டறி" என்று கேளுங்கள். Google Hotels ஒருங்கிணைப்பு மூலம், உங்கள் குறிப்பிட்ட பட்ஜெட் மற்றும் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் உங்களுக்கு அருகிலுள்ள குறைந்த கட்டண அறைகளையோ பிரீமியம் தங்குமிடங்களையோ விரைவாகக் கண்டறியலாம்.
நிச்சயமாக. திட்டங்கள் திடீரென மாறினால், குறைந்த கட்டணங்களைக் கொண்ட கடைசி நிமிட விமானங்களைக் கண்டறியும்படியோ உங்களுக்கு அருகிலுள்ள ஹோட்டல் அறைகளைக் கண்டறியும்படியோ கூட Geminiயிடம் கேட்கலாம்.
Gemini ஒரு AI அசிஸ்டண்ட் ஆகும். இதைப் பயன்படுத்த கட்டணம் இல்லை. இது Google Flights மற்றும் Hotels உடன் தடையின்றி இணைவதால், உங்கள் உரையாடல் சாளரத்தில் இருந்தே விமானக் கட்டணங்களை ஒப்பிடும் இணையதளமாகவோ விமானக் கட்டணக் கண்காணிப்புக் கருவியாகவோ இதைப் பயன்படுத்தலாம். இது விருப்பங்களைக் கண்டறிந்து ஒப்பிட்டு, உங்கள் முன்பதிவை நிறைவுசெய்ய உங்களை இணைக்கும்.
பதில்களைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணக்கத்தன்மையும் கிடைக்கும் நிலையும் மாறுபடும். குறிப்பிட்ட அம்சங்களைப் பெற 18+ வயது நிரம்பியிருக்க வேண்டும்.