Skip to main content

Gemini ஆப்ஸிற்கான கொள்கை வழிகாட்டுதல்கள்

Gemini ஆப்ஸிற்கான எங்கள் குறிக்கோள் நிஜ உலகில் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது குற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வெளியீடுகளைத் தவிர்க்கும் அதே நேரத்தில், பயனர்களுக்கு அதிகபட்ச உதவியாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். பல்வேறு Google தயாரிப்புகளில் ஆய்வு, பயனர் கருத்து, நிபுணர் ஆலோசனை ஆகியவற்றின் மூலம் பல வருடங்களாக உருவாக்கப்பட்ட நிபுணத்துவம் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில், பின்வருபவை போன்ற சில வகையான சிக்கலான வெளியீடுகளை Gemini தவிர்க்க நாங்கள் பெரிதும் முயல்கிறோம்:

சிறார் பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தல்கள்

சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் உட்பட சிறாரைத் தவறாக அல்லது பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதுடன் தொடர்புடைய வெளியீடுகளை Gemini உருவாக்கக்கூடாது.

ஆபத்தான செயல்பாடுகள்

நிஜ உலகில் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆபத்தான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் அல்லது அவற்றை ஊக்குவிக்கும் வெளியீடுகளை Gemini உருவாக்கக்கூடாது. இதில் அடங்குபவை:

  • உண்ணும் பழக்கத்தில் உள்ள கோளாறுகள் உட்பட, தற்கொலை மற்றும் தன்னைத்தானே காயப்படுத்தும் பிற செயல்களுக்கான வழிமுறைகள்.

  • சட்டவிரோதமான மருந்துகளை வாங்குவதற்கான வழிமுறைகள், ஆயுதங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் போன்ற, நிஜ உலகில் தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்பாடுகளுக்கு உதவுதல்.

வன்முறை மற்றும் கொடூரமான உள்ளடக்கம்

அதிர்ச்சியூட்டும், பரபரப்பை ஏற்படுத்தும், தேவையற்ற வன்முறைச் செயல்கள் (நிஜத்திலோ கற்பனை உலகிலோ) போன்றவற்றை விவரிக்கும் அல்லது சித்தரிக்கும் வெளியீடுகளை Gemini உருவாக்கக்கூடாது. இதில் அடங்குபவை:

  • அதிகப்படியான இரத்தம், கொடூரம் அல்லது காயங்கள்.

  • விலங்குகளுக்கு எதிரான தேவையற்ற வன்முறை.

தீங்கு விளைவிக்கும் வகையில் உண்மைத் தகவல்களில் துல்லியமின்மை

நிஜ உலகில் ஒருவரின் உடல்நலம், பாதுகாப்பு, நிதி போன்றவற்றுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தீங்கு விளைவிக்கக்கூடிய தவறான தகவல்களைக் கொண்ட வெளியீடுகளை Gemini உருவாக்கக்கூடாது. இதில் அடங்குபவை:

  • பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்/மருத்துவம் குறித்த ஒருமித்த கருத்துகள், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ நடைமுறைகள் போன்றவற்றுடன் முரண்படும் மருத்துவத் தகவல்கள்.

  • பேரிடர் தொடர்பான தவறான எச்சரிக்கைகள், நடந்துகொண்டிருக்கும் வன்முறை பற்றிய தவறான செய்திகள் போன்ற, உடல்ரீதியான பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தவறான தகவல்கள்.

உபத்திரவம், தூண்டுதல் மற்றும் பாகுபாடு

வன்முறையைத் தூண்டுதல், தீங்கிழைக்கும் தாக்குதல்களைச் செய்தல், தனிநபர்கள்/குழுக்களை மிரட்டுதல், அச்சுறுத்துதல் போன்றவற்றைச் செய்யும் வெளியீடுகளை Gemini உருவாக்கக்கூடாது. இதில் அடங்குபவை:

  • தனிநபர்களையோ குழுவையோ தாக்க, காயப்படுத்த அல்லது கொலை செய்ய அழைப்பு விடுத்தல்.

  • சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட பண்பின் அடிப்படையில் தனிநபர்கள் அல்லது குழுக்களைத் தரக்குறைவாகக் குறிப்பிடும் அல்லது பாகுபடுத்திக்காட்டும் வாக்கியங்கள்.

  • பாதுகாக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மனிதர்களைவிட தரம் குறைந்தவர்கள் அல்லது தாழ்வானவர்கள் என்று தெரிவித்தல். உதாரணமாக, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் விலங்குகளுடன் ஒப்பிடுதல் அல்லது அடிப்படையிலேயே அவர்கள் தீயவர்கள் என்று தெரிவித்தல்.

பாலியல் ரீதியில் வெளிப்படையான உள்ளடக்கம்

வெளிப்படையான/கொடூரமான பாலியல் செயல்கள், பாலியல் வன்முறை, உடல் பாகங்களைப் பாலியல் ரீதியாக வெளிப்படையான முறையில் காட்டுதல் போன்றவற்றை விவரிக்கும் அல்லது சித்தரிக்கும் வகையிலான வெளியீடுகளை Gemini உருவாக்கக்கூடாது. இதில் அடங்குபவை:

  • ஆபாசமான அல்லது பாலுணர்வைத் தூண்டும் உள்ளடக்கம்.

  • பாலியல் வன்புணர்வு, பாலியல் தாக்குதல், பாலியல் வன்கொடுமை போன்றவற்றின் சித்தரிப்புகள்.

சூழலையும் நிச்சயமாகக் கருத்தில் கொள்வோம். வெளியீடுகளை மதிப்பிடும்போது கல்வி, ஆவணப்படம், கலை, அறிவியல் பயன்பாடுகள் உட்பட பல காரணிகளைக் கருத்தில் கொள்கிறோம்.

பயனர்கள் Geminiயுடன் எண்ணற்ற வழிகளில் உரையாடலாம், அதேபோல் Geminiயும் அவர்களுக்கு எண்ணற்ற வழிகளில் பதிலளிக்க முடியும். எனவே இந்த வழிகாட்டுதல்களை Gemini பின்பற்றுவதை உறுதிசெய்வது சவாலான காரியம். ஏனென்றால் LLMகள் பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் இயங்குபவை. அதாவது, அவை எப்போதும் பயனர் உள்ளீடுகளுக்கு புதிய மற்றும் வேறுபட்ட பதில்களை உருவாக்கி வழங்கும். Geminiயின் வெளியீடுகள் அதன் பயிற்சித் தரவை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது, Gemini சில நேரங்களில் அந்தத் தரவின் வரம்பைப் பிரதிபலிக்கும். இவை விரிவான மொழித்திறன் மாடல்களில் உள்ள பொதுவான சவால்கள். இந்தச் சவால்களைச் சரிசெய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றினாலும், சில சமயங்களில் Gemini எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை உருவாக்கலாம், வரம்பிற்குட்பட்ட கண்ணோட்டங்களை மட்டுமே வெளிப்படுத்தலாம் அல்லது மிகையாகப் பொதுமைப்படுத்தலாம். குறிப்பாக, சிக்கலான ப்ராம்ப்ட்டுகளுக்கான பதில்களில் இது நடக்கலாம்.  இந்த வரம்புகளைப் பற்றி பயனர்களுக்கு வெவ்வேறு வழிகளில் தெரிவிக்கிறோம், கருத்து தெரிவிக்க அவர்களை ஊக்குவிக்கிறோம். எங்கள் கொள்கைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ், வசதியான கருவிகளை அகற்றப்பட வேண்டிய உள்ளடக்கத்தைப் புகாரளிப்பதற்காக வழங்குகிறோம். மிக முக்கியமாக, பயனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தடைசெய்யப்பட்ட பயன்பாடு தொடர்பான எங்கள் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Gemini ஆப்ஸை மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அது அவர்களுக்கு எந்தளவு உதவியாக இருக்கிறது என்பதையும் நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதால் தேவைப்படும்போது இந்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களைச் செய்வோம். Gemini ஆப்ஸை உருவாக்குவதற்கான எங்களின் அணுகுமுறையைப் பற்றி இங்கே மேலும் தெரிந்துகொள்ளலாம்.