Google வழங்கும் தினசரிப் பணிகளுக்கான AI அசிஸ்டண்ட்
வார்த்தைகளை வீடியோக்களாக மாற்றுங்கள்
எங்களின் சமீபத்திய வீடியோ உருவாக்க மாடல்கள் மூலம் உயர்தர, 8 வினாடி வீடியோக்களை உருவாக்கலாம். நீங்கள் மனதில் நினைப்பதை விவரித்தால் போதும், உங்கள் யோசனைகள் உயிர் பெற்று அசைவதைப் பார்க்கலாம்.
சிக்கலான கேள்விகளைக் கேளுங்கள்
டிஎன்ஏ ரெப்ளிகேஷன் செயல்முறையைப் புரிந்துகொள்ள வேண்டுமா அல்லது கையால் எதையேனும் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? Google Searchசில் Geminiயை ஒருங்கிணைத்துள்ளதால் அதனிடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், தெளிவான பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலாம்.
நொடிகளில் படங்களை உருவாக்குங்கள்
With Nano Banana, our latest image generation model, you can get inspiration for a logo design, explore diverse styles from anime to oil paintings, and create pictures in just a few words. Once generated, you can instantly download or share with others.
Gemini Live உடன் பேசுங்கள்
Gemini Live உடன் யோசனைகளைக் கலந்து ஆலோசிக்கலாம், நேர்காணல் கேள்விகளைப் பயிற்சி செய்யலாம், விவாதிக்க விரும்பும் ஃபைல் அல்லது படத்தைப் பகிர்ந்து அது தொடர்பாகப் பேசலாம்.
குறைவான நேரத்தில் எழுதலாம்
வெறுமையை விரைவில் முழுமையாக்கலாம். வார்த்தைகளைச் சுருக்கவும், முதல் வரைவுகளை உருவாக்கவும், ஃபைல்களைப் பதிவேற்றி நீங்கள் ஏற்கெனவே எழுதியுள்ளதன் மீதான கருத்தைப் பெறவும் Geminiயைப் பயன்படுத்தலாம்.
உங்கள் கற்றலை மேம்படுத்தலாம்
உங்கள் அறிவைச் சோதித்துப் பார்க்க, பாடத் திட்டங்கள், தலைப்பு குறித்த சுருக்க விவரங்கள், குவிஸ்கள் ஆகியவற்றை உருவாக்கலாம். Gemini Live உடன் உரையாடி விளக்கக்காட்சிகளையும் பயிற்சி செய்துபார்க்கலாம்.
ஒரே நேரத்தில் பல ஆப்ஸ் பணிகளுக்கான உதவியைப் பெறுங்கள்
ஆப்ஸுக்கு இடையே மாறாமல் உங்களுக்குத் தேவையானதைக் கண்டறிய Gmail, Google Calendar, Google Maps, YouTube, Google Photos ஆகியவற்றில் உள்ள உங்கள் உள்ளடக்கத்துடன் Gemini இணைந்து செயல்படுகிறது. அலாரங்களை அமைக்கவும், இசையின் ஒலி அளவைக் கட்டுப்படுத்தவும், கைகளைப் பயன்படுத்தாமல் அழைப்புகளைச் செய்யவும் Geminiயைப் பயன்படுத்தலாம்.
Deep Research அம்சம் மூலம் தேடல் நேரங்களைக் குறையுங்கள்
நூற்றுக்கணக்கான இணையதளங்களில் தேடி, தகவல்களைப் பகுப்பாய்வு செய்து விரிவான அறிக்கையைச் சில நிமிடங்களில் உருவாக்கலாம். எல்லாவற்றையும் குறித்தும் விரைவாகத் தெரிந்துகொள்ள உதவக்கூடிய பிரத்தியேக ஆய்வு ஏஜெண்ட்டை உங்களுடன் வைத்திருப்பது போன்றதாகும்.
Gemகள் மூலம் பிரத்தியேக நிபுணர்களை உருவாக்குங்கள்
மிகவும் விரிவான வழிமுறைகளைச் சேமித்து உங்களுக்கான AI நிபுணரை உருவாக்க ஃபைல்களைப் பதிவேற்றலாம். Gemகள் உங்களுக்கு ஒரு கேரியர் கோச், கலந்து ஆலோசிப்பதற்கான பார்ட்னர், கோடிங்கில் உதவுபவர் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பெரிய ஃபைல்கள், குறியீட்டுத் தரவு சேமிப்பகங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்
10 லட்சம் டோக்கன்கள் அளவுடைய சூழல் நினைவுத்திறன் மூலம், முழுப் புத்தகங்கள், நீண்ட அறிக்கைகள், அதிகபட்சம் 1,500 பக்கப் பதிவேற்றங்கள், 30 ஆயிரம் வரிகள் வரையுள்ள கோடிங் தரவு ஆகியவற்றை Gemini Pro ஒரே நேரத்தில் புரிந்துகொள்ளும்.
திட்டங்கள்
பணியிடம், பள்ளி அல்லது வீட்டில் பணிகளைக் கையாள Google AIயிடம் அன்றாட உதவியைப் பெறுங்கள்.
2.5 Flashக்கான அணுகல்
2.5 Proவிற்கான வரம்பிற்குட்பட்ட அணுகல்
Imagen 4 மூலம் பட உருவாக்கம்
Deep Research
Gemini Live
Canvas
Gemகள்
உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அதிகரிக்க, ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களுக்கு அதிக அணுகலைப் பெறுங்கள்.
Google AIயிலேயே மிகச்சிறந்தவற்றிற்கான அதிகபட்ச அணுகலையும் பிரத்தியேக அம்சங்களுக்கான அணுகலையும் பெறுங்கள்.
Instagramமில் Gemini
உங்கள் தேவைகளின் அடிப்படையில் மேம்படுத்துங்கள்
- 1.
Google AI Pro 150க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கிறது - நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
- 2.
140க்கும் அதிகமான நாடுகளில் Google AI Ultra கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
- 3.
Flow மற்றும் Whisk ஆகிய இரண்டிற்கும் பொதுவாக மாதாந்திரக் கிரெடிட்டுகள் பகிரப்படுகின்றன.
- 4.
140க்கும் அதிகமான நாடுகளில் Flow கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
- 5.
140க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் Veo 3 கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
- 6.
140க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் Whisk கிடைக்கிறது – நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
- 7.
Gemini 2.5 Pro மாடல் மற்றும் AI மோடில் உள்ள Deep Search அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன.
- 8.
Jules என்பது தற்போது பீட்டா நிலையில் உள்ள ஓர் ஒத்திசைவற்ற கோடிங் ஏஜெண்ட்டாகும். Jules பயன்படுத்த, நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். தற்போது ஆங்கிலம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, கிடைக்கும் நிலையைப் பொறுத்தது. உத்திரவாதமாகச் சொல்ல முடியாது.
- 9.
அமெரிக்காவில் மட்டுமே Project Mariner கிடைக்கிறது.
- 10.
40க்கும் அதிகமான நாடுகளில் YouTube Premium தனிநபர் திட்டம் கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.