இதோ Chromeமில் Gemini
உங்கள் பிரவுசரிலேயே AI உதவி.
நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களுடன் இணைந்து செயல்படும் நுண்ணறிவு.
நீங்கள் திறந்துள்ள பக்கங்களின் சூழல் விவரம் அடிப்படையில் முக்கியமான தகவல்களைப் பெறலாம், கருத்தாக்கங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம், பதில்களைக் கண்டறியலாம்.
முக்கியமானவற்றை விரைவாகப் புரிந்துகொள்ள வேண்டுமா? கட்டுரைகள், பக்கங்கள் அல்லது மெசேஜ் தொடர்களின் சுருக்க விவரங்களை உங்கள் பிரவுசரில் நேரடியாக Gemini வழங்கும். எனவே முக்கிய விவரங்களை நீங்கள் விரைவாகத் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது குறித்து ஏதேனும் கேள்வி உள்ளதா? Geminiயைக் கேளுங்கள். திறந்துள்ள பக்கங்களின் சூழல் விவரத்தைப் பயன்படுத்தி தொடர்புடைய பதில்களையும் விளக்கங்களையும் வழங்குவதால் உங்கள் கவனம் சிதறாது.
விரிவான விளக்கங்களைப் பெறுங்கள். சிக்கலான தலைப்புகளையோ புதிய கருத்தாக்கங்களையோ நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, அதில் உள்ள குழப்பமான பகுதிகளைத் தெளிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்த உள்ளடக்கத்துடன் நீங்கள் தீவிரமாக ஈடுபடவும் Geminiயிடம் உதவி கேட்கலாம்.
தயாரிப்புகள் குறித்து ஆராய்கிறீர்களா அல்லது எதைத் தேர்ந்தெடுப்பது என்று யோசிக்கிறீர்களா? ஒரு பக்கத்தில் இருந்து முக்கியத் தகவல்கள், விவரக்குறிப்புகள், சாதக பாதகங்கள் ஆகியவற்றை எடுத்துத் தருமாறு Geminiயைக் கேட்கலாம். இதன் மூலம் தெளிவுடனும் எளிதாகவும் சரியான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
கலந்து ஆலோசிக்கவோ கருத்துகளை ஒழுங்கமைக்கவோ ஒரு தலைப்பைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளவோ விரும்புகிறீர்களா? Chromeமிலேயே உள்ள Gemini Live உடன் இயல்பாக உரையாடி, குரல் வடிவில் பதில்களைப் பெறுங்கள்.
கம்ப்யூட்டரில் உள்ளதைப் போலவே, மொபைலில் உள்ள Geminiயும் நீங்கள் படிக்கும் விஷயங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும். Android மொபைலில், Chrome உட்பட உங்கள் திரையில் உள்ள எதற்கும் பதிலளிக்கும். விரைவில் iOSஸிலும் Chrome ஆப்ஸில் Geminiயைப் பெற முடியும்.
உங்கள் இணையம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது
Chromeமில் உள்ள Gemini உங்கள் விருப்பப்படி உங்களுடன் இணைந்து செயல்படும். நீங்கள் கேட்கும்போது மட்டுமே இது உதவி செய்யும், எனவே கட்டுப்பாடு உங்களிடமே இருக்கும்.
உதவி தேவைப்படும்போது தயார்நிலையில் இருக்கும்.
Gemini ஐகானைக் கிளிக் செய்வதன் மூலமாகவோ நீங்கள் அமைத்துள்ள கீபோர்டு ஷார்ட்கட் மூலமாகவோ பயன்படுத்தத் தேர்வுசெய்யும்போது மட்டுமே Chromeமில் உள்ள Gemini செயல்படும். நீங்கள் கேட்கும் சமயங்களில் மட்டுமே உதவிக்கு வரும், நீங்கள் கேட்பதை மட்டுமே செய்துமுடிக்கும்.
உங்களுக்கு ஏற்றவாறு உதவியைப் பெறுங்கள்
Chromeமில் உள்ள Gemini மூலம் உங்களுக்கு ஏற்ற உதவியைப் பெறுங்கள். உங்கள் கேள்வியை இயல்பாகப் பேசலாம் அல்லது டைப் செய்யலாம். மேலும் உள்ளடக்கத்தை விரைவாகப் புரிந்துகொள்ளவும் கடினமான பணிகளைச் செய்துமுடிக்கவும் அப்பக்கத்தின் உள்ளடக்கத்தை Gemini பயன்படுத்தும்.
உங்கள் செயல்பாடுகளை எளிதாக நிர்வகியுங்கள்
உங்கள் செயல்பாடுகளை நிர்வகிக்க, நீக்க, முடக்க உங்கள் Gemini ஆப்ஸ் செயல்பாடுகளை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
இணையத்தின் புதிய வடிவம்.
Chromeமில் இருக்கும் Gemini மூலம், உங்கள் பிரவுசரிலேயே AI உதவியைப் பெறலாம். இதனால், பக்கங்களுக்கு இடையே மாற வேண்டியதில்லை. மேலும், நீங்கள் திறந்துள்ள பக்கங்களின் சூழல் விவரத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை விரைவாகப் புரிந்துகொள்ளலாம் அல்லது பணிகளைச் செய்துமுடிக்கலாம்.
பொதுவான கேள்விகள்
Chromeமில் Gemini அம்சத்தின் மூலம், முக்கியமான தகவல்களைப் பெறுவது, கருத்தாக்கங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது, பதில்களைக் கண்டறிவது மற்றும் பலவற்றை எளிதாகச் செய்ய உங்கள் பிரவுசரிலேயே AI உதவியைப் பெறலாம். மிகவும் தொடர்புடைய பதில்களை வழங்க, திறந்திருக்கும் உங்கள் பக்கங்களின் சூழல் விவரத்தை Chromeமில் உள்ள Gemini பயன்படுத்துகிறது.
Chromeமில் Gemini என்பது டெஸ்க்டாப்பில் உள்ள Chrome பிரவுசரின் ஒரு பகுதியாகும். மேலும் இது, வேறு பிரவுசரில் gemini.google.com தளத்திற்குச் செல்வது அல்லது Chromeமில் உள்ள முகவரிப் பட்டியில் @gemini என டைப் செய்து Gemini இணைய ஆப்ஸில் உரையாடலைத் தொடங்குவது போன்றவற்றிலிருந்து வேறுபட்டதாகும். பிற பிரவுசர்களில் (அல்லது Chromeமின் உள்ளடக்கப் பகுதியில்) Gemini இணைய ஆப்ஸைப் பயன்படுத்தலாம். ஆனால் Chromeமில் உள்ள Geminiயைப் பயன்படுத்தும்போது நீங்கள் செய்யும் பக்க உள்ளடக்கப் பகிர்வு அல்லது Live பயன்முறை பயன்பாடு போன்றவற்றைப் பிற பிரவுசர்களில் செய்யமுடியாது.
Windows அல்லது Mac டெஸ்க்டாப்பில் நீங்கள் அமைக்கும் கீபோர்டு ஷார்ட்கட் மூலமாகவோ Chrome கருவிப்பட்டியில் உள்ள Gemini ஐகான் மூலமாகவோ Chromeமில் Geminiயை அணுகலாம்.
Androidல் Chromeமைப் பயன்படுத்தும்போதும் பிற ஆப்ஸைப் பயன்படுத்தும்போதும் பவர் பட்டனை அழுத்திப் பிடிப்பதன் மூலமாகவும் Geminiயை இயக்கலாம். விரைவில், iOSஸிலும் Chromeமில் Gemini அம்சமானது Chrome ஆப்ஸிலேயே கட்டமைக்கப்படும். மேலும் Chrome omnibox மூலம் அதை அணுகலாம்.
Chrome மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கும் அமெரிக்காவில் உள்ள தகுதிபெறும் அனைத்து Mac மற்றும் Windows பயனர்களுக்கும் Chromeமில் Gemini அம்சம் கிடைக்கிறது. விரைவில் இந்த அம்சத்தை இன்னும் பலருக்கும் கூடுதல் மொழிகளுக்கும் வழங்குவோம் என நம்புகிறோம்.
Chrome மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கும் அமெரிக்காவில் உள்ள தகுதிபெறும் iPhone பயனர்களுக்கு iOSஸில் Chromeமில் Gemini அம்சம் விரைவில் கிடைக்கவுள்ளது.
பதில்களைப் பாருங்கள். அமைவு தேவை. இணக்கத்தன்மையும் கிடைக்கும்நிலையும் மாறுபடும். 18+